வீடியோ.. 6 பந்துக்கு 6 சிக்ஸர்.. ரைட் ஹேண்ட் யுவராஜ் சிங்.. ஆந்திர வீரர் காட்டிய அதிரடி.. பிசிசிஐ உற்சாகம்

0
541
BCCI

கிரிக்கெட்டில் ஒரு ஓவருக்கு அதிக விக்கெட், ஒரு ஓவருக்கு அதிக சிக்ஸர்கள் என்பது எப்பொழுதும் கிரிக்கெட் ரசிகர்களை மிகவும் பரவசப்படுத்தும் கிளர்ச்சி அடையசாகச சம்பவங்களாக இருக்கிறது.

முதன்முதலில் 1968 ஆம் ஆண்டு இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் நாட்டிங்ஹாம்சையர் அணிக்காக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் லெஜன்ட் கேரி சோபர்ஸ், கிளாமோர் அணியின் மால்கம் நாஷ் ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து இந்தியாவில் முதல் முறையாக மும்பை அணிக்காக விளையாடிய ரவி சாஸ்திரி பரோடா அணிக்கு எதிராக 1985 ஆம் ஆண்டு ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்தார்.

இந்திய உள்நாட்டு அளவில் ரவி சாஸ்திரிக்கு பிறகு ருத்ராஜ் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர் தாண்டி அடித்ததோடு அதிக ரன் குறித்த வீரராகவும் சாதனை படைத்திருக்கிறார்.

ஆனால் சர்வதேச அளவில் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்த வீரராக தென் ஆப்பிரிக்காவின் வலது கை துவக்க ஆட்டக்காரர் இருக்கிறார் கிப்ஸ் இருக்கிறார். இவர் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிராக இந்த சாதனையை செய்தார்.

- Advertisement -

இதற்குப் பின்பு யுவராஜ் சிங் 2007 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் டி20 உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் ஆறு சிக்ஸர்கள் தொடர்ந்து அடித்தார்.

பின்பு வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த கீரன் பொல்லார்ட் சில ஆண்டுகளுக்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் வந்திருந்த இலங்கை அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் ஆறு சிக்ஸர்கள் அடித்திருந்தார். இதுவெல்லாம் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் தொடர்ச்சியாக அடிக்கப்பட்ட ஆறு சிக்ஸர்கள் தொடர்பான வரலாறுகள்.

இதையும் படிங்க : “ஜெய்ஸ்வால் திறமைசாலி.. ஆனால் விராட் பாய் இல்லாத குறையை தீர்த்தது இவர்தான்” – சுப்மன் கில் பேட்டி

தற்பொழுது நடைபெற்று வரும் கேனல் சிகே.நாயுடு டெஸ்ட் டிராபியில் ஆந்திராவைச் சேர்ந்த வம்சி கிருஷ்ணா, ரயில்வேஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் தமன்தீப் சிங் ஓவரில் ஆறு சிக்ஸர்கள் தொடர்ந்து அடித்து சாதனை படைத்திருக்கிறார். மேலும் இந்த போட்டியில் அவர் 64 பந்துகளில் 110 ரன்கள் குறித்து இருக்கிறார். இதற்கான வீடியோவை பிசிசிஐ வெளியிட்டு இருக்கிறது.