“ஜெய்ஸ்வால் திறமைசாலி.. ஆனால் விராட் பாய் இல்லாத குறையை தீர்த்தது இவர்தான்” – சுப்மன் கில் பேட்டி

0
334
Gill

நாளை மறுநாள் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் நான்காவது டெஸ்ட் போட்டி துவங்கி நடைபெற இருக்கிறது.

இந்திய அணியில் ஏற்கனவே அனுபவ வீரர்கள் இல்லாத நிலையில், பும்ராவுக்கும் அதிரடியாக இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ஓய்வு கொடுத்திருக்கிறது.

- Advertisement -

இந்தத் தொடரைப் பொறுத்தவரை எடுத்துக் கொண்டால் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மிகவும் தைரியமாகவே செயல்பட்டு இருக்கிறது. சில ஆண்டுகளாக சுழல் பந்துவீச்சுக்கு மிகவும் ஒத்துழைக்கும் ஆடுகளங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் இந்தத் தொடரில் அப்படி இல்லாமல் பேட்டிங் செய்ய சாதகமாகவும் ஆடுகளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

கேப்டன் ரோஹித் சர்மா இளம் வீரர்கள் கொண்ட அணியை வழிநடத்தி வெல்வதில் கொஞ்சம் சிரமத்தை அனுபவித்தாலும் கூட, இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்துவதில் மிகவும் குறிக்கோளாக இருக்கிறார்கள். கில் ஆரம்பித்து ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான், துருவ் ஜுரல் என மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி குறித்து பேசி உள்ள சுப்மன் கில் “இளைஞர்கள் பணிவாக இருப்பதில் எந்த தவறும் இல்லை என நான் நினைக்கிறேன். உங்களுக்கே தெரியும் உங்களிடம் திறமை இல்லை என்றால், உங்களால் மீண்டும் மீண்டும் இரட்டை சதம் அடிக்க முடியாது. உலகக் கிரிக்கெட்டில் இதை நிறைய பேர் செய்யவில்லை. ஜெய்ஸ்வால் தொடர்ச்சியாக இரட்டைச் சதங்கள் அடித்தார். அவரை நாங்கள் எட்டு டெஸ்ட் போட்டிகளாக பார்த்து வருகிறோம். அவர் மிகவும் பிசியான வீரர்.

- Advertisement -

இந்தியாவில் நாங்கள் எங்கு விளையாடினாலும் எங்களுக்கு சுழற் பந்துவீச்சில் ஒத்துழைப்பு கொஞ்சம் இருக்க செய்கிறது. எனவே அஸ்வின் பாய் மற்றும் ஜட்டு பாய் இருவரும் விக்கெட்டுகள் எடுக்கிறார்கள். ஆனால் இப்படியான சூழ்நிலையில் எங்களுடைய வேகப்பந்துவீச்சாளர்கள் விக்கட்டுகளை சிறப்பான முறையில் வீழ்த்தியது தான் பெரிய வித்தியாசத்தை உண்டாக்கி இருக்கிறது.

பேட்டிங்கில் விராட் பாயை எப்படி மிஸ் செய்கிறோமோ, அதேபோல் பந்துவீச்சில் பும்ரா பாய் கிளாசை மிஸ் செய்கிறோம்.விராட் பாய் இல்லாத நிலையில், உள்ளே வந்த சர்பராஸ் கான் மிகச் சிறப்பாக விளையாடி இருக்கிறார்.

இதையும் படிங்க : ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் ரேங்கிங்.. ஜெய்ஸ்வால் எதிர்பார்க்காத உயர்வு.. இந்திய வீரர்கள் மீண்டும் ஆதிக்கம்

தற்போது எங்கள் அணியில் வேகப்பந்து வீச்சில் நல்ல அனுபவம் உள்ள வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சூழல் சாதகம் இல்லாத நிலையிலும்தாக்கத்தை ஏற்படுத்த முடியும். குறிப்பாக ரிவர்ஸ் ஸ்விங்கில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள்” எனக் கூறியிருக்கிறார்.