வேற மைதானமா இருந்தா ரிஷப் பண்ட் என் பவுலிங்க சும்மா அடிச்சிருப்பார்.. ஸ்டப்ஸ் விக்கெட்தான் பெஸ்ட் – வருண் சக்கரவர்த்தி பேச்சு

0
110
Varun

இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் டெல்லி அணிக்கு எதிராக கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருக்கிறது. இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற கொல்கத்தா வீரர் வருண் சக்கரவர்த்தி போட்டி குறித்து பேசி இருக்கிறார்.

கடந்த சில போட்டிகளாக சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று வந்த டெல்லி அணி இன்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் அந்த அணியில் குல்தீப் யாதவ் மட்டுமே 30 ரன்கள் தாண்டி, 26 பந்தில் 35 ரன்கள் எடுத்தார். அந்த அணி 20 ஓவர்களில் 153 ரன்கள் சேர்த்தது. கொல்கத்தா பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி ரிஷப் பண்ட், ஸ்டப்ஸ், குமார் குஷ்கரா என மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணிக்கு பின் சால்ட் 33 பந்தில் 68 ரன்கள் எடுத்தார். ஆட்டத்தை முடித்து வைக்க கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 23 பந்தில் 33 ரன்கள் எடுத்தார். முடிவில் கொல்கத்தா அணி 16.3 ஓவர்களில், 21 பந்துகள் மீதம் வைத்து இலக்கை எட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வெற்றிக்குப் பின் ஆட்டநாயகன் விருது வென்ற வருண் சக்கரவர்த்தி பேசும் பொழுது “ஆடுகளத்தில் ஆரம்பத்தில் பந்து கொஞ்சம் நின்று வந்தது. மேலும் நாங்கள் பேட்டிங் செய்யும்பொழுது பந்து கொஞ்சம் சுழலவும் ஆரம்பித்தது. ரிஷப் பண்டுக்கு கேட்ச் விடப்பட்ட என்னுடைய பந்து சிறந்த பந்து என நினைத்தேன். ஆனால் அவரை அவுட் ஆகிய பந்து வேறு மைதானத்தில் சிக்ஸருக்கு சென்று இருக்கும்.

கிரிக்கெட்டை பொறுத்தவரை மிகவும் விளிம்பு நிலை விளையாட்டாக மாறிவிட்டது. இன்றைய போட்டியில் ஸ்டப்ஸ் விக்கெட்தான் எனக்கு பிடித்தமான ஒன்று. அவருக்கு நான் ஒரு லெக் ஸ்பின்னராக பந்துவீச நினைத்தேன். அது நன்றாக இன்று வேலை செய்தது.

- Advertisement -

இதையும் படிங்க : நரைனுக்கும் எனக்கும் ஒரு திட்டம்தான்.. மேட்சுக்கு ஒருநாள் முன்ன பேசுவோம்.. உள்ள பேசவே மாட்டோம் – பில் சால்ட் பேட்டி

பெரும்பாலும் எனக்கு பந்துவீச்சில் ஏதாவது சரியாக நடக்கவில்லை என்றால், நரைன் எப்பொழுதும் உடன் இருப்பார். எங்களுக்கு இடையிலான நட்பு என்றால் அது அமைதிதான். அவர் அதிகம் பேச மாட்டார். பஞ்சாப் அணிக்கு எதிராக நான் நிறைய ரன்களை விட்டு தந்து விட்ட பொழுது, அபிஷேக் நாயக் மற்றும் ஷாருக் கான் இருவரும் என்னிடம் பேசியது எனக்கு மிகவும் உதவியாக அமைந்தது. மேலும் சியர்ஸ் கேர்ள்ஸ் சிக்ஸருக்கு மட்டும் நடனம் ஆடலாம். பவுண்டரிகளுக்கு தேவையில்லை என்று நினைக்கிறேன்” என்று நகைச்சுவையாக கூறியிருக்கிறார்.