நரைனுக்கும் எனக்கும் ஒரு திட்டம்தான்.. மேட்சுக்கு ஒருநாள் முன்ன பேசுவோம்.. உள்ள பேசவே மாட்டோம் – பில் சால்ட் பேட்டி

0
103
Salt

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக பிரம்மாண்ட வெற்றி பெற்று இருக்கிறது. கொல்கத்தா அணியின் வெற்றிக்கு பேட்டிங்கில் முக்கிய காரணமாக பில் சால்ட் இருந்திருக்கிறார். வெற்றிக்குப் பின் அவர் போட்டி குறித்து பேசி இருக்கிறார்

இன்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி எதிர்பார்த்ததை விட மோசமாக செயல்பட்டது. அந்த அணிக்கு முன்னணி பேட்ஸ்மேன்கள் யாரும் 30 ரன்களை அடிக்கவில்லை. குல்தீப் யாதவ் மட்டுமே கடைசியில் சிறப்பாக விளையாடிய 26 பந்தில் 35 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் வரும் சக்கரவர்த்தி சிறப்பாக பந்துவீசி 3 முக்கிய விக்கெட்டுகளை 16 ரன்னுக்கு வீழ்த்தினார்.

- Advertisement -

தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணிக்கு துவக்க ஆட்டக்காரர் பின் சால்ட் அதிரடியாக 33 பந்தில் 7 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர் உடன் 68 ரன்கள் குவித்தார். இதற்கு அடுத்து கொல்கத்தா அணி 16.3 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெற்றிக்குப் பின் பேசிய பில் சால்ட் கூறும் பொழுது “நாங்கள் ஹோம் கேம்களில் சிறப்பாக செயல்பட்டு வந்திருக்கிறோம். அது தொடர்ந்து வருவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். பஞ்சாபுக்கு எதிரான கடைசி கடினமான ஆட்டத்தில் இருந்து மீண்டு வர வேண்டிய தேவை இருந்தது. இந்த போட்டியில் பந்துவீச்சாளர்கள் செயல்பட்ட விதத்தில் மகிழ்ச்சி.

- Advertisement -

நான் தாக்கி விளையாடுவதில் நிறைய ஆபத்துகள் இருக்கிறது. நீங்கள் விரும்பாத ரிஸ்கை எடுக்கக் கூடாது. மேலும் உங்களுடைய ஷாட் செலெக்ஷன் சரியாக இருக்க வேண்டும். மேலும் உங்களை நீங்களே நம்ப வேண்டும். மேலும் ஆடுகளம் முதலில் எப்படி செயல்படுகிறது என்பதை பார்ப்பதும் நல்லது.

இதையும் படிங்க : என் முடிவை விடுங்க.. இப்படி ஆடினா ஜெயிக்க முடியாது.. தோல்விக்கு முக்கிய காரணம் இதுதான் – ரிஷப் பண்ட் பேட்டி

களத்திற்கு வெளியே நானும் நரைனும் நிறைய நகைச்சுவையான சம்பவங்கள் நடக்கும். ஆனால் களத்திற்கு உள்ளே அப்படியே எதுவும் கிடையாது. நாங்கள் போட்டிக்கு முந்தைய நாள் போட்டி குறித்து பேசி கொள்வோம். அவர் பொதுவாகவே அதிகம் பேச மாட்டார். ஆனால் விளையாட்டு பற்றி அதிகம் சிந்திக்க கூடியவர். நாங்கள் ஒருவர் தாக்கி விளையாடும் பொழுது, இன்னொருவர் அதற்கு வசதியாக பந்தை தட்டி விளையாடி வாய்ப்பைக் கொடுக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -