கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முற்றிலும் மாறியதற்கு இவங்க 2 பேர் தான் காரணம்.. சூர்யகுமார் யாதவ் கருத்து

இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான வன சக்கரவர்த்தி தன்னுடைய குறுகிய கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்து இருக்கின்றார். ஐபிஎல் தொடரில் முதல்முறையாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உடனடியாக உலகக் கோப்பை டி20 தொடரில் விளையாடும் வாய்ப்பு பெற்று உச்சத்திற்கு சென்றார்.

- Advertisement -

ஆனால் அந்தத் தொடரில் சிறப்பாக செயல்படாத காரணத்தால் வருண் சக்கரவர்த்தி அதிரடியாக நீக்கப்பட்டார். அதுமட்டுமல்லாமல் மூன்று ஆண்டுகளாக இந்திய அணியில் அவருக்கு ஒரு முறை கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் 2024 ஐ பி எல் சீசனுக்கு பிறகு வருண் சக்கரவர்த்தி மீண்டும் தேர்வு குழுவினரின் ரேடாரில் வந்தார்.

கம்பேக்கிற்கு காரணம் யார்:

அதன் பின் வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் மீண்டும் இடம் பிடித்த வருண் சக்கரவர்த்தி அதன் பின் ஒரு நாள் கிரிக்கெட்டிலும் விளையாடி சாம்பியன்ஸ் கோப்பையை இந்திய அணி வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இந்த நிலையில் தன்னுடைய கம்பேக்கிற்கு கம்பீரும், சூரியகுமார் யாதவும் தான் காரணம் என வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், என்னுடைய இந்திய அணியின் கம்பேக்கிற்கு இந்த இரண்டு பேர் தான் காரணம். வங்கதேச தொடருக்கு முன்பு சூரியகுமார் யாதவும் என்னிடம் அணியில் உன்னை சேர்க்க நான் முயற்சி எடுப்பேன். என்னுடைய அணியில் நீ இருக்க நான் விரும்புகிறேன் என்று எனக்கு உறுதி அளித்தார்.

- Advertisement -

கேப்டனே இவ்வாறு சொல்லும் போது நமக்கு உத்வேகம் தானாக அதிகரித்து விடும். அது மட்டுமில்லாமல் பயிற்சியாளர் கம்பீரும், என்னிடம் உரையாடி ஊக்கமளித்தார். யார் என்ன சொன்னாலும் சரி, எனது டி20 அணிக்கான திட்டத்தில் நீ முக்கிய பங்காக இருப்பாய் என்று நம்பிக்கை வார்த்தை அளித்தார்.

ரோகித் சர்மா போல் சூர்யகுமார்:

கம்பீரின் போர்குணம் தான் நாங்கள் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தது. சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் சரி, கொல்கத்தா அணியின் வெற்றி பயணத்திலும் சரி கம்பீரின் பங்கு மிகவும் முக்கியமானது. சூரிய குமாரை பற்றி சொல்ல வேண்டுமென்றால் அவர் ரோகித் சர்மா போல் செயல்படுவார். அணியின் யுக்திகளை வகுப்பதில் சூரியகுமார் வல்லவர்.

இதையும் படிங்க: பாபர் அசாம், ரிஸ்வான் இல்லனா என்ன? இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தும் என தேர்வுக்குழு தலைவர் ஜாவேத் கருத்து

ஒருவேளை அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் பயணித்ததால் பல சிறந்த கேப்டன்களிடமிருந்து அவர் கற்றுக் கொண்டிருப்பார் என நினைக்கின்றேன். சூரியகுமார் எப்போதுமே பவுலர்களிடம் எந்த ஒரு நெருக்கடியும் ஏற்படுத்த மாட்டார். ஒவ்வொரு பவுலருக்கும் சூரியகுமார் யாதவ் போல் கேப்டன் அமைய வேண்டும் என்பது ஒரு ஆசையாக இருக்கும் என்று வருண் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.

- Advertisement -
Published by

Recent Posts