இந்திய கிரிக்கெட்

அகர்கர் மேல அந்த அழுத்தம் இருந்துச்சு.. அதான் நான் உட்பட இந்திய அணியில் இருந்து விலக காரணம் – அஸ்வின் ஓபன் டாக்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், முன்னாள் தலைமை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் குறித்து தனது கருத்தை பகிர்ந்துள்ளார். அகர்கரை தனக்கு நன்றாக தெரியும் என்றும், தான் ஓய்வு பெறும் முடிவை எடுத்தபோது அவரிடம் தொலைபேசியில் பேசியதாகவும் அஸ்வின் கூறியுள்ளார். அப்போது தனது ஓய்வு தனிப்பட்ட முடிவு என்று அகர்கர் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அகர்கர் தனது பதவிக்காலத்தில் பல முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டிய பொறுப்பில் இருந்ததாக அஸ்வின் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, அணியில் இருந்த சீனியர் வீரர்களை படிப்படியாக விலக்கி, அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்க வேண்டிய சூழல் அவருக்கு இருந்ததாகவும், அந்தப் பட்டியலில் தானும் ஒருவராக இருந்ததாகவும் அஸ்வின் கூறியுள்ளார். இருந்தாலும் தனிப்பட்ட விஷயங்களை ஒதுக்கி வைத்துப் பார்த்தால், அகர்கர் சிறந்த தேர்வுக்குழு தலைவராக செயல்பட்டதாகவே தான் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அஸ்வின் பேசும்போது, “நாம் பல நேரங்களில் ஈகோ அல்லது தனிப்பட்ட உறவுகளின் அடிப்படையில்தான் விஷயங்களை பார்க்கிறோம். ஆனால் அவர்களின் இடத்தில் நம்மை வைத்து பார்க்க மறந்துவிடுகிறோம். அஜித் அகர்கரின் பொறுப்பு அடுத்த தலைமுறை அணியை உருவாக்குவதுதான். அணியை முடிந்தவரை அதிக போட்டிகளில் வெற்றி பெறச் செய்வதுடன், அடுத்த வரிசை வீரர்களையும் உருவாக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருந்தது. அந்த விஷயத்தில் அவர் எந்த தவறும் செய்யவில்லை” என்று கூறியுள்ளார்.

- Advertisement -
Published by

Recent Posts