இன்னைக்கு கேகேஆர் டக்அவுட்ல கம்பீர கோலி பார்த்தா.. கண்டிப்பா இது நடக்க போகுது – வருண் ஆரோன் பேச்சு

0
264
Virat

ஐபிஎல் 17ஆவது சீசனில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதிக்கொள்ள இருக்கின்றன. ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா அணி என்றாலே பெங்களூர் அணிக்கு கசப்பான நினைவுகளே இருக்கின்றன. பெங்களூர் அணி 49 ரன்களில் சுருண்டது கொல்கத்தா அணிக்கு எதிராக என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்சிபி அணியை பொறுத்தவரை எடுத்துக் கொண்டால் பஞ்சாப் அணிக்கு எதிராக முதல் வெற்றியைப் பெற்றிருந்தாலும் கூட, பேட்டிங்கில் விராட் கோலிதான் வழக்கம் போல் ரன்கள் எடுத்திருக்கிறார். தோற்கும் நிலையில் இருந்த பொழுது தினேஷ் கார்த்திக் கடைசி கட்டத்தில் விளையாடி வெற்றி பெற வைத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் இன்னும் சரியான ஃபார்முக்கு வரவில்லை. பந்துவீச்சில் முகமது சிராஜ் உடன் யாஸ் தயால் சிறப்பாக இருப்பது அந்த அணிக்கு நல்ல விஷயம்.

- Advertisement -

கேகேஆர் அணியை எடுத்துக் கொண்டால், அவர்கள் 10 ஓவருக்கு இரண்டு மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து இருந்தால், அடுத்த பத்து ஓவர்களில் ரிங்கு சிங் மற்றும் ரசல் இருவரும் அந்த அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்று விடுவார்கள். இரண்டு பெரிய பினிஷர்கள் இருக்கின்ற காரணத்தினால், அந்த அணி முதல் பத்து ஓவர்களில் சராசரியாக விளையாடி விக்கெட்டை தராமல் இருந்தாலே போதும். பந்துவீச்சை பொறுத்தவரை எடுத்துக் கொண்டால் சிறப்பான சுழல் பந்துவீச்சை வைத்திருக்கிறார்கள். வேகப்பந்து வீச்சிலும் பெரிய அளவுக்கு குறை சொல்ல முடியாது. ஆர்சிபி அணியை விட கேகேஆர் அணி வலிமையாகத் தெரிகிறது.

இரண்டு அணிகளுக்கும் ஐபிஎல் வரலாறு மிகவும் சுவாரசியமானது என்பதால் போட்டிக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே சமயத்தில் தற்பொழுது கம்பீர் கேகேஆர் அணிக்கு மென்டராக சென்று இருக்கின்ற காரணத்தினால், ஏற்கனவே விராட் கோலி மற்றும் கம்பீர் மோதல்இருந்து வரும் நிலையில், அது இந்த போட்டிக்கு இன்னும் கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

கடந்த முறை பெங்களூர் மைதானத்தில் கம்பீர் வாய் மீது விரலை வைத்து அமைதியாக இருக்கும் படி கூட்டத்தை சொல்ல, அவர் மென்டராக இருந்த லக்னோவுக்கு சென்று விராட் கோலி ஒட்டுமொத்த லக்னோ அணியையும் வம்பு இழுக்க, நிலைமை மிகவும் மோசமானது. அதனுடைய தாக்கம் இப்பொழுது வரை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : என்ன இத்தனை கோடியா?.. சிஎஸ்கே ஆர்சிபி முதல் போட்டி.. டிவி ஆன்லைனில் மலைக்க வைக்கும் சாதனை

இந்த நிலையில் கிரிக்கெட் வர்ணனையாளராக மாறியிருக்கும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் பேசும் பொழுது “நான் எதையும் கிளற விரும்பவில்லை. சமயத்தில் களத்திற்கு வெளியே நடக்கும் போட்டியை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். பெங்களூர் டக் அவுட்டுக்கு அருகில் கம்பீர் இருக்கப் போகிறார். அங்கு என்ன நடக்கப் போகிறது என்று எனக்குத் தெரியவில்லை. விராட் எப்பொழுதும் தீவிரத்துடன் இருக்க விரும்புவார் என்பது உறுதி. அதே சமயத்தில் கொல்கத்தா டக் அவுட்டை பார்த்தால் ஃபயர் அப் ஆகிவிடுவார்” எனக் கூறியிருக்கிறார்.