கோலி உங்ககிட்ட ஆர்சிபி இதை எதிர்பார்க்கல.. 15 ஓவர்ல போறப்ப இப்படி செய்யலாமா? – கவாஸ்கர் விமர்சனம்

0
146
Virat

இன்று ஆர்சிபி அணி ஹைதராபாத் அணியை அதன் சொந்த மைதானத்தில் 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. ஆர்சிபி அணி வென்ற பொழுதும் விராட் கோலி மெதுவாக பேட்டிங் செய்தது சுனில் கவாஸ்கர் போன்ற மூத்த வீரர்களால் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆர்சிபி அணி பவர் பிளேவில் 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்தது. விராட் கோலி போட்டியை பவுண்டரியுடன் துவங்கி, பவர் பிளேவில் நல்ல ஸ்டிரைக் ரேட்டில் விளையாடினார். ஆர்சிபி அணி ஆரம்பித்த விதத்திற்கு, 230 ரன்கள் எடுக்கக் கூடியதாகத் தெரிந்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து உள்ளே வந்த வில் ஜேக்ஸ் ஆட்டம் இழக்க, பிறகு விராட் கோலி பேட்டில் இருந்து பவுண்டரிகள் வரவே இல்லை. உடன் இணைந்து விளையாடிய ரஜத் பட்டிதார் மயங்க் மார்கண்டே ஓவரில் தொடர்ந்து நான்கு சிக்ஸர்கள் அடித்து, 20 பந்துகளில் அதிரடியாக 50 ரன்கள் எடுத்ததால், ஆர்சிபி அணியின் ரன் வேகம் ஓரளவுக்கு காப்பாற்றப்பட்டது.

இன்றைய போட்டியில் மொத்தம் 43 பந்துகளை சந்தித்த விராட் கோலி 51 ரன்கள் எடுத்தார். பவர் பிளேவுக்கு பிறகு அவர் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. இன்றைய போட்டியில் அவரது ஸ்ட்ரைக் ரேட் மொத்தம் 118 மட்டுமே இருக்கிறது. அவர் 14 ஓவர்கள் தாண்டிதான் ஆட்டம் இழந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கவாஸ்கர் பேசும்பொழுது “பேட்டிங்கில் நடுவில் அவர் டச்சை இழந்து விட்டார். எனக்கு நம்பர்கள் சரியாக ஞாபகம் இல்லை, ஆனால் அவர் 30 ரன்கள் தாண்டிய பிறகு ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை என்று நினைக்கிறேன். நாள் முடிவில், துவக்க வீரராக வந்து ஆட்டத்தை துவங்கி, 14 ஓவர் வரையில் விளையாடிவிட்டு, 118 ஸ்ட்ரைக் ரேட்டில் செல்கிறீர்கள். இதை உங்களுடைய அணி உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : கடைசி ஓவர் 19 ரன்.. பாகிஸ்தானை சொந்த மண்ணில் வீழ்த்தியது இளம் நியூசிலாந்து அணி.. தொடர் தோல்வி

மேலும் இதுகுறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் சைமன் காடிச் கூறும்பொழுது “விராட் கோலி உத்வேகத்தை இழந்தார் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. ரஜத் பட்டிதார் அழகாக விளையாடினார் அவர்தான் பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் அடிக்க முயற்சி செய்தார். விராட் கோலியும் அதைச் செய்ய வேண்டி இருந்தது. ஆனால் 120 ஸ்ட்ரைக் ரேட்டில்தான் இருந்தார் என்று நினைக்கிறேன். ஆர்சிபி அணி 220 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டும். ஹைதராபாத் அணிக்கு எதிராக 206 ரன்கள் எடுப்பது போதுமானதாக இருக்காது” என்று பேசி இருக்கிறார்