ஐபிஎல் தொடர் 39 ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதைத் தொடர்ந்து லக்னோ அணி வீரரை உலகின் அபாரமான வீரர் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் பாராட்டியுள்ளார்.
மகேந்திர சிங் தோனியின் நெருங்கிய நண்பரான ஹைடன் தற்போது மிகச் சிறப்பாக விளையாடிய விடும் தோனியை குறிப்பிடாமல், வேறு ஒரு வீரரை குறிப்பிட்டு பேசியிருப்பது சிஎஸ்கே ரசிகர்கள் இடையே சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற 39 வது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 210 குவித்தது. சென்னை அணிக்கு சிறப்பாக விளையாடிய ருத்ராஜ் 108 ரன்களும் சிவம் டுபே 66 ரன்களும் குவித்தனர்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணி ஆஸ்திரேலியா அணியைச் சேர்ந்த மார்க்கஸ் ஸ்டாயினிஸ் அபாயகரமான ஆட்டத்தால்19.3வது ஓவரில் வெற்றி பெற்றது. ஸ்டாயினிஸ் 124 ரன்கள் குவித்தார். இருப்பினும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ருதுராஜும் லக்னோ அணிக்காக ஸ்டாய்னிசும் சரிக்கு சரியாக விளையாட ஆட்டத்தின் முக்கியமாக திருப்பனையை ஏற்படுத்தியது நிக்கோலஸ் பூரான்.
15 பந்துகளில் அவர் குவித்த 34 ரன்கள்தான் ஆட்டத்தில் திருப்பனையை ஏற்படுத்தியது என்று சிஎஸ்கேவின் முன்னாள் வீரர் ஹைடன் குறிப்பிட்டு பேசியிருக்கிறார். இது குறித்து அவர் கூறும் பொழுது
“தற்போது கிரிக்கெட் உலகில் நிக்கோலாஸ் பூரான் வேகபந்துவீச்சு, சுழற் பந்துவீச்சு என இரண்டிலும் அபாரமாக விளையாடக்கூடிய வீரராக இருக்கிறார். இவரால் பெரிய சிக்சர்களை சுலபமாக அடிக்க முடியும்.
லக்னோ மற்றும் சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் ருத்ராஜ் ஆடிய விதத்தில் நிகராக ஸ்டாய்னிஸ் ஆடி இருக்கிறார். இதனால் இரண்டு அணிகளுமே சரிசமமான அளவிலே இருந்தது. ஆனால் ஆட்டத்தில் பூரான் அடித்த 34 ரன்கள் வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் பூரானை லக்னோ அணியில் எவ்வாறு பயன்படுத்தப் போகிறீர்கள் என்பது குறித்து அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்ரிடம் பேசினேன்.
இதையும் படிங்க: கோலி உங்ககிட்ட ஆர்சிபி இதை எதிர்பார்க்கல.. 15 ஓவர்ல போறப்ப இப்படி செய்யலாமா? – கவாஸ்கர் விமர்சனம்
அதற்கு பேட்டிங்கில் ஐந்தாவது அல்லது ஆறாவது இடத்தில் களமிறங்கி போட்டியை மாற்றக்கூடிய மேட்ச் வின்னர் அணியில் இருக்க வேண்டும் என்று நினைத்ததாகவும் அதனை பூரான் மிகச் சிறப்பாக செய்து கொண்டு வருகிறார் என்று கூறினார். தற்போது ஐபிஎல் தொடரில் போட்டிகள் மிகக் கடினமான மாறும். எனவே இந்த சூழ்நிலையை சமாளிக்க ஒரு சர்வதேச வீரரால் மட்டுமே முடியும். அதனை பூரான் சிறப்பாக செய்து அணியை முன்னேற்றி செல்வார்” என்று ஹைடன் கூறி இருக்கிறார்.