என்ன இத்தனை கோடியா?.. சிஎஸ்கே ஆர்சிபி முதல் போட்டி.. டிவி ஆன்லைனில் மலைக்க வைக்கும் சாதனை

0
53
IPL2024

தற்பொழுது நடப்பு ஐபிஎல் 17வது சீசனில் 9 போட்டிகள் நடைபெற்ற முடிவுக்கு வந்திருக்கின்றன. இந்த ஒன்பது போட்டிகளிலும் சொந்த மைதானத்தில் விளையாடிய அணிகளே வெற்றி பெற்று இருக்கின்றன. இதில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் புள்ளி பட்டியலில் இருக்கின்றன.

இந்த தொடரில் முதல் போட்டி மார்ச் 22ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையே நடைபெற்றது. வழக்கம் போல் இந்த போட்டியில் சிஎஸ்கே அணி மிக எளிதாக ஆறு விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வென்றது. முதல்முறையாக வாய்ப்பு பெற்ற வேகப் பந்துவீச்சாளர் முஸ்தபிஷூர் ரஹ்மான் நான்கு விக்கெட் கைப்பற்றி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

- Advertisement -

கோவிட் காலத்தில் இருந்து ஐபிஎல் தொடரை பார்க்கக் கூடிய ரசிகர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக மாறி வருகிறது. குறிப்பாக அதற்குப் பிறகு ஐபிஎல் தொடரின் வணிகம் பெரிய அளவில் உயர்ந்திருக்கிறது. தற்பொழுது ஒளிபரப்பு உரிமத்தை விற்ற வகையில், உலகின் இரண்டாவது பெரிய விலைக்கு விற்கப்பட்ட விளையாட்டு ஒளிபரப்பு உரிமமாக மாறி இருக்கிறது. ஐபிஎல் தொடரின் ஒரு போட்டிக்கு மட்டும் 118 கோடி ரூபாய் ஒளிபரப்பு உரிமம் மூலம் கிடைக்கிறது.

இந்த தொடரில் நடந்து முடிந்த சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே ஆன முதல் போட்டி பார்வையாளர்கள் வகையில் பல சாதனைகளை படைத்திருக்கிறது. முதல் 16.1 கோடி ரசிகர்கள் போட்டியை பார்த்திருக்கிறார்கள். 1276 கோடி நிமிடங்கள் பார்க்கப்பட்டு இருக்கிறது என்று அதிகாரப்பூர்வமாக டிஸ்னி ஹாட் ஸ்டார் நிறுவனம் அறிவித்திருக்கிறது. மேலும் அந்த நேரத்தில் ஒட்டுமொத்தமாக 6.1 கோடி பேர் ஒரே நேரத்தில் பார்த்ததும் சாதனையாக அமைந்திருக்கிறது.

இது மட்டும் இல்லாமல் போட்டி தொடங்குவதற்கு முன்பாக போட்டி சம்பந்தமாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகள் மட்டும் 24.5 பார்வையாளர்களை கவர்ந்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. மேலும் ஆன்லைனில் ஒளிபரப்பாகும் ஜியோ சினிமாவில் 11.3 கோடி பார்வையாளர்கள் பார்த்திருப்பதும் இந்த வகையில் சாதனையாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : ஐபிஎல் 2024 ஆரஞ்சு கேப்: கோலியை முந்திய ரியான் பராக்.. முதல் இடத்தில் தென்னாப்பிரிக்க வீரர்

தற்போது ஐபிஎல் தொடரின் வளர்ச்சி உலக கிரிக்கெட்டில் அசுரத்தனமாக இருக்கிறது. எதிர்கால கிரிக்கெட்டில் ஐபிஎல் தொடர் தற்போது செலுத்தி வரும் ஆதிக்கத்தை விட மிகப் பெரிய அளவில் செலுத்தலாம். சர்வதேச போட்டிகள் குறைக்கப்பட்டு ஒரே ஆண்டில் இரண்டு ஐபிஎல் தொடர்கள் நடந்தால் ஆச்சரியப்படுவதற்கு கிடையாது. மேலும் எல்லா அணிகளும் மற்ற அணிகளுடன் இரண்டு போட்டிகளில் விளையாடும் படி சீக்கிரத்தில் அட்டவணை மாற்றப்பட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.