நாங்க தோக்கல.. வித்தியாசமா முயற்சி செய்தோம்.. டி20 உலககோப்பைல பாருங்க – கேப்டன் பாபர் அசாம் பேச்சு

0
53
Babar

நேற்று பாகிஸ்தானில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நான்காவது டி20 போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் முக்கிய வீரர்கள் இல்லாத நியூசிலாந்து அணியிடம் பாகிஸ்தான் இரண்டாவது தோல்வி அடைந்தது. இந்தத் தோல்வி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேசியிருக்கிறார்.

நியூசிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதல் போட்டி மழையால் விளையாடப்படாமல் கைவிட, அடுத்த இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றது. இந்த நிலையில்தான் நேற்று நான்காவது போட்டி நடைபெற்றது.

- Advertisement -

டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி துவக்க ஆட்டக்காரர் டிம் ராபின்சன் 36 பந்தில் 51 ரன்கள் எடுக்க, நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் பதவித்து தரப்பில் அப்பாஸ் அப்ரிடி மூன்று விக்கெட் எடுத்தார்.

இதைத்தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு முன்னணி வீரர்கள் யாரும் ரன்கள் எடுக்க வில்லை. கேப்டன் பாபர் அசாம் ஐந்து ரன்களில் வெளியேறினார். பகார் ஜமான் மட்டும் போராடி 45 பந்தில் 61 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட 13 ரன்கள் மட்டுமே எடுத்து, நான்கு ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. தற்பொழுது 4 போட்டி முடிவடைந்திருக்க இரண்டு ஒன்று என நியூசிலாந்து முன்னிலை வகிக்கிறது.

தோல்விக்கு பின் பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ” நியூசிலாந்து அணி பேட்டிங்கை நன்றாக துவங்கியது. ஆனால் எங்களுடைய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக திரும்பி வந்து அவர்களை கட்டுப்படுத்தினார்கள். நாங்கள் பேட்டிங் செய்யும்பொழுது ஒரு லென்த்தில் சிக்கிக்கொண்டோம். பவர் பிளே முடிவதற்குள் நாங்கள் நிறைய விக்கெட்டுகளை இழந்து விட்டோம். துரதிஷ்டவசமாக சேஸ் செய்ய முடியவில்லை. இது வேறு மாதிரியான விக்கெட், இங்கு 190 ரன்கள் எடுக்கலாம்.

- Advertisement -

இதையும் படிங்க : தோனி இல்லை.. ஐபிஎல்லில் உலகின் சிறந்த பவர் ஹிட்டர் இவர்தான்.. சிஎஸ்கே முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் பாராட்டு

வீரர்களின் காயங்கள் காரணமாக சில மாற்றங்கள்செய்தோம். ஆனாலும் எங்களுடைய இளைஞர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள். எங்கள் பென்ச் வலிமையை சோதிக்க நாங்கள் வித்தியாசமான காமினேஷனை அமைக்க முயற்சி செய்தோம். இங்கு ஒவ்வொரு விளையாட்டும் வித்தியாசமானது, அதனால் நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்கிறோம்.டி20 உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்னால், இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.