“துரதிஷ்டவசமா தோத்துட்டோம்.. இந்த இந்திய வீரருக்கு தலை வணங்குகிறோம்” – பென் ஸ்டோக்ஸ் பேச்சு

0
1993
Stokes

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியை வென்று எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தது.

இதன் காரணமாக இங்கிலாந்து அணி இந்திய மண்ணில் எப்படி அதிரடியான தனது முறையில் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடும் என்று இருந்த எதிர்பார்ப்பு, அப்படியே இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணி எப்படி சமாளிக்கும் என்கின்ற எதிர்பார்ப்பாக மாறியது.

- Advertisement -

டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக இங்கிலாந்து அணியின் மேல் இருந்த அழுத்தம், முதல் டெஸ்ட் போட்டி முடிவுக்கு பின்னால் இந்திய அணியின் மேல் திரும்பியது. இதன் காரணமாக இந்திய அணியின் மேல் அழுத்தம் நிலவியது.

இந்த நிலையில் இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியை 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை சமன் செய்திருக்கிறது. இந்திய பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் மற்றும் பந்துவீச்சில் பும்ரா இருவரும் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள்.

தோல்விக்கு பின் பேசியுள்ள இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் “நாங்கள் இந்த ஸ்கோரை அடிக்க முடியும் என்று நம்பினோம். நாங்கள் விளையாடும் விதத்தில் எங்களால் இதைச் செய்ய முடியும். ஸ்கோர் போர்டில் பிரஷர் இருப்பதுதான் நன்றாக விளையாடுவதற்கு உதவி செய்யும்.

- Advertisement -

நாங்கள் விளையாடிய விதம் மற்றும் இந்தியாவை அழுத்தத்திற்கு உள்ளாக்கிய விதத்தில் மகிழ்ச்சிதான். ஆனால் துரதிஷ்டவசமாக எங்களால் சரியான முடிவை பெற முடியவில்லை.

அதிரடியாக விளையாடுவது குறித்து எங்கள் அணியில் எந்த ஆலோசனையும் கிடையாது. எங்கள் முன்னால் ஒரு வேலை இருக்கிறது அதை நாங்கள் செய்து முடிக்க வேண்டும் என்பது மட்டும்தான் இருந்தது. எங்கள் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருக்கக்கூடிய அனைவரும் தரமான வீரர்கள்.

அனுபவமற்ற சுழல் பந்துவீச்சு கொண்டிருக்கிறோம் என்று சொல்ல முடியாது. நாங்கள் இதை ஒரு சவாலாகத்தான் எடுத்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் அணியில் ஜிம்மி ஆண்டர்சன் ஒரு ஆச்சரியமாக இருக்கிறார்.

இதையும் படிங்க : 106 ரன்.. கெத்து காட்டிய இந்திய இளம் அணி.. இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை சமன் செய்தது

மேலும் இந்த போட்டியில் ஆண்டர்சன் மற்றும் பும்ரா என இரண்டு சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களை பார்க்கிறோம். எதிர் அணி வீரராக இருந்தாலும் கூட பும்ரா மாதிரி ஒரு வீரருக்கு மரியாதை செய்கிறோம். ஆண்டர்சன் எங்களுக்கு அப்படியானவர்தான்” என்று கூறி இருக்கிறார்.