மயங்க் யாதவ் மட்டுமில்லை.. சிஎஸ்கேவுக்கும் 150 கிமீ இந்திய பவுலர்.. ருதுராஜ் வெளியிட்ட தகவல்

0
575
Ruturaj

சிஎஸ்கே அணி தனது பவுலிங் யூனிட்டில் முன்னணி வீரர்களை காயத்தால் இழந்திருந்தாலும் கூட, இன்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சிறப்பான வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு ஒரு குறிப்பிட்ட பந்துவீச்சாளர் குறித்து ருதுராஜ் ஆச்சரியப்படத்தக்க விஷயம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இன்றும் வழக்கம் போல் ருதுராஜ் இந்த போட்டிக்கான டாஸில் தோற்றுவிட்டார். மேலும் பேட்டிங் யூனிட்டும் திடீரென ராகுல் சாஹரிடம் சிக்கி சரிந்தது. 20 ஓவர்களில் சிஎஸ்கே அணி 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. ப்ளே ஆப் சுற்றிற்கான வாய்ப்புக்கு இந்த போட்டி மிக முக்கியமானது என்பதால், கேப்டனாக ருதுராஜுக்கு பெரிய நெருக்கடி இருந்தது.

- Advertisement -

இப்படியான நிலையில் துஷார் தேஷ்பாண்டே பவர் பிளேவில் இரண்டு விக்கட்டுகளை கைப்பற்றினார். இதற்கடுத்து சான்ட்னர் மற்றும் ரவீந்திர ஜடேஜா மிடில் ஓவர்களில் அற்புதமாக செயல்பட்டு நான்கு விக்கெட்டுகளை சேர்ந்து கைப்பற்றினார்கள். இதன் காரணமாக சிஎஸ்கே அணிக்கு கொஞ்சம் கொஞ்சமாக வெற்றி உறுதியானது.

இப்படியான நிலையில் என்று கேப்டன் ருதுராஜ் இம்பேக்ட் பிளேயரை தேர்ந்தெடுப்பதில் மிகவும் பொறுமையாக இருந்தார். தோனி வந்து அவுட் ஆனால் கூட தேவைப்பட்டால் மட்டுமே சமீர் ரிஸ்வியை பேட்டிங் செய்யும்போது இம்பேக்ட் பிளேயராக எடுத்துவர முடிவு செய்திருந்தார். இந்த நிலையில் அவர் தேவைப்படாமல் போக பந்துவீச்சாளர் சிமர்ஜித் சிங்கை கொண்டு வந்தார்.

இன்று முதல் வாய்ப்பை ஐபிஎல் தொடரில் பெற்ற சிமர்ஜித் சிங் மிகச் சிறப்பாக பந்துவீசி 3 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே விட்டுத் தந்து, ஜித்தேஷ் சர்மா மற்றும் ஹர்ல் படேல் என இரண்டு விகட்டுகளை கைப்பற்றினார். இன்று அவருடைய பந்து வீச்சு பலரையும் கவர்ந்திருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : 16.1 ஓவர்.. சுருண்ட லக்னோ.. கொ ல்கத்தா சிஎஸ்கேவுக்கு செய்த உதவி.. பிளே ஆப் வாய்ப்பில் ஏற்பட்ட மாற்றம்

இவரைப் பற்றி ருதுராஜ் இன்று கூறும்பொழுது, சிமர்ஜித் சிங் வேகமாக பந்து வீசுவதை எப்படி செய்கிறார்? என்று தனக்கு புரிவதே கிடையாது என்றும், தங்களுடைய பயிற்சி செசன்களில் மிக அனாயசமாக மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசுகிறார் என்றும், அவருக்கு எதுவும் இன்னும் முடிந்து விடவில்லை என்றும் பாராட்டி கூறியிருக்கிறார். உண்மையில் பதிரனா மற்றும் தீபக் சாஹர் இல்லாத நிலையில், இவ்வளவு வேகமான ஒரு பவுலர் சிஎஸ்கே அணிக்கு மிகவும் அவசியமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!