106 ரன்.. கெத்து காட்டிய இந்திய இளம் அணி.. இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை சமன் செய்தது

0
321
ICT

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருக்கிறது.

ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின், ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தி தொடரில் முன்னிலை வகித்தது. இந்த நிலையில் இரண்டாவது போட்டியை வென்று தற்பொழுது இந்திய அணி தொடரை சமன் செய்திருக்கிறது.

- Advertisement -

இரண்டாவது போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி ஜெய்ஸ்வால் 209 ரன்கள் உடன் 396 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் மற்றும் ரேகான் அஹமத் தலா மூன்று விக்கெட் பற்றினார்கள்.

இதற்கு அடுத்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய இங்கிலாந்து அணி 253 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியின் ஜாக் கிரௌலி 76 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் தரப்பில் பும்ரா மிகச் சிறப்பாக பந்துவீசி 45 ரன்களுக்கு கைப்பற்றினார்.

தொடர்ந்து இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் சுப்மன் கில் 110 ரன்கள் எடுக்க, 255 ரன்கள் எடுத்து சுருண்டது. இங்கிலாந்து தரப்பில் டாம் ஹார்ட்லி நான்கு விக்கெட் வீழ்த்தினார். இங்கிலாந்து அணிக்கு 399 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி போட்டியின் நான்காவது நாளான இன்று 292 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் தரப்பில் பும்ரா மற்றும் அஸ்வின் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள். இங்கிலாந்து தரப்பில் ஜாக் கிரவுலி மீண்டும் 73 ரன்கள் எடுத்தார்.

இதையும் படிங்க : அஸ்வினின் 500வது விக்கெட்.. அம்பயர் முடிவாக இருந்தும் அவுட் இல்லை.. ரூல் புக் என்ன சொல்கிறது

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஒன்றுக்கு ஒன்று என சமன் செய்திருக்கிறது. மீதம் உள்ள மூன்று போட்டிகளில் குறைந்தபட்சம் இரண்டு போட்டிகளை வெல்லும் அணி தொடரை கைப்பற்றும் நிலை உருவாகி இருக்கிறது.