சிஎஸ்கே ஐபிஎல் வரலாறு.. தல தோனியை தாண்டி தளபதி ஜடேஜா செய்த மெகா சாதனை

0
698
Jadeja

சிஎஸ்கே அணிக்கு பெரிய நட்சத்திர வீரர்கள் ஆக இருந்தவர்களுக்கு கிடைத்த வரவேற்பு, அவர்கள் செய்ததை விட அதிகம் செய்யக்கூடிய ரவீந்திர ஜடேஜாவுக்கு இருந்தது கிடையாது. இன்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சத்தம் இல்லாமல் ரவீந்திர ஜடேஜா சிஎஸ்கே வரலாற்றில் ஒரு மகத்தான சாதனையை படைத்திருக்கிறார்.

இன்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் ருதுராஜ் மற்றும் டேரில் மிட்சல் 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை ஏற்படுத்தினார்கள். ஆனால் இருவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதற்கு நடுவில் உள்ளே வந்த சிவம் துபே மீண்டும் ஒருமுறை கோல்டன் டக் அடித்தார்.

- Advertisement -

சிஎஸ்கே அணி மிகவும் நெருக்கடியான நிலையில் சிக்கிக்கொண்டது. மேலும் பந்து பழையதாகி பேட்டிங் செய்வதற்கு மெதுவான ஆடுகளத்தில் மிகவும் கடினமாக மாறியது. இப்படியான நிலையில் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா பேட்டிங்கில் 26 பந்தில் மிக முக்கியமான 43 ரன்கள் எடுத்தார். இந்த குறிப்பிட்ட ஆடுகளத்தில் இது மிகச்சிறந்த ரன் ஆக சிஎஸ்கேவுக்கு அமைந்தது.

இதற்கு அடுத்து பந்துவீச்சுக்கு வந்த ரவீந்திர ஜடேஜா மிடில் ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் வரிசையில் முதுகெலும்பை முறித்து விட்டார். மொத்தம் நான்கு ஓவர்கள் பந்து வீசி அவர் 20 ரன்கள் மட்டுமே விட்டு தந்து மிக முக்கியமான மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன் காரணமாக ரவீந்திர ஜடேஜா ஆட்ட நாயகன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலமாக அவர் தோனியின் சாதனையை உடைத்து, சிஎஸ்கே அணிக்காக அதிக ஆட்டநாயகன் விருது வாங்கியவர் என்கின்ற சாதனையை படைத்திருக்கிறார். இந்தச் சாதனை அவர் சிஎஸ்கே அணிக்குபோட்டிகளில் எப்படியான தாக்கத்தை உருவாக்குகிறார்? அவர் எவ்வளவு முக்கியமான வீரர்? என்பதைக் காட்டுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : சிஎஸ்கே வெற்றிக்கு.. கேப்டன் ருதுராஜ் எடுத்த 3 முக்கியமான முடிவுகள்.. கேப்டன்சியில் மாஸ் கம்பேக்

ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணிக்காக அதிக ஆட்டநாயகன் விருது வென்ற வீரர்கள் :

ரவீந்திர ஜடேஜா – 16
மகேந்திர சிங் தோனி – 15
சுரேஷ் ரெய்னா – 12
ருதுராஜ் கெய்க்வாட் – 11
மைக்கேல் ஹசி – 10