இதற்கு முந்தைய இரண்டு ரஞ்சித் சீசன்களில் மும்பை அணிக்காக ஆயிரக்கணக்கான ரன்களை குவித்து பிரமிக்க வைத்தார் சர்பராஸ் கான்.
இதன் காரணமாக நிச்சயம் அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கும் என்று பரவலான எதிர்பார்ப்பு இருந்தது. அந்த நம்பிக்கை சர்ப்ராஸ் கானுக்கு மிக அதிகமாகவே இருந்தது.
ஆனால் கடந்த பங்களாதேஷ் டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் உறுதியாக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவரை தேர்வுக்குழு பரிசீலிக்கவில்லை. மேலும் அவர் களத்தில் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை வேறு எடுத்தது.
இதற்கடுத்து புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் கடந்த ஆண்டு மத்தியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் சர்ப்ராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் புறக்கணிக்கப்பட்டு பின் எதிர்ப்புகளால் சர்பராஸ் கான் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இதற்கு அடுத்து இந்தியா வந்துள்ள இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இந்தியா ஏ விளையாடிய இரண்டாவது போட்டியில் 160 பந்துகளில் 161 ரன்கள் குவித்து இந்திய ஏ அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார்.
தற்போது காயத்தின் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ரவீந்திர ஜடேஜா மற்றும் கேஎல்.ராகுல் இருவரும் விலகி இருப்பதால் இவருக்கு இந்திய அணியில் முதல் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. விராட் கோலி வந்தால் இவர் இந்திய அணியில் இருப்பாரா? இரண்டாவது டெஸ்டில் இவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பது குறித்து கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.
இந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் கரீபியன் கெயில் உடன் சர்பராஸ் கான் இணைந்து விளையாடி இருக்கிறார். இதன் காரணமாக இவர்களுக்குள் நல்ல நட்பு இருக்கிறது. எனவே தாங்கள் இருவரும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு கையில் இவருக்கு வாழ்த்து செய்தியில் ” சென்று விளையாடி வெற்றி பெறுக” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : ரஜத் பட்டிதார் சர்பராஸ் கான்?.. யாருக்கு வாய்ப்பு தர வேண்டும்? – ஆகாஷ் சோப்ரா புதிய கோணத்தில் பதில்
மேலும் 2016 ஆம் ஆண்டு சர்பராஸ்கான் பற்றி பேசியுள்ள கெயில் ” நாங்கள் இருவரும் நன்றாக பழகுகிறோம். எனக்கு சர்பராஸ் கான் மெசேஜ்கள் அனுப்புகிறார். அவர் மிகவும் இளமையாக இருக்கிறார். எனக்கு மகன் போன்றவர். நிச்சயமாக அவர் இந்திய கிரிக்கெட் எதிர்காலத்திற்கான வீரர். அவரைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.