ஆண்கள் கிரிக்கெட்டில் யாரும் செய்யாத சாதனை.. எல்லிஸ் பெர்ரி படைத்துள்ள 2 அபூர்வ உலக சாதனைகள்

0
58

ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர கிரிக்கெட்டரும், பெங்களூரு அணியின் ஆல் ரவுண்டருமான எல்லீஸ் பெர்ரி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் இரண்டு முக்கிய உலக சாதனைகளை படைத்திருக்கிறார். ஆண்கள் கிரிக்கெட்டில் கூட யாரும் செய்யாத சாதனையை செய்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மும்பை மற்றும் பெங்களூர் அணிகள் மோதிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, பெங்களூர் அணியின் சிறப்பான பந்துவீச்சினால் 19 ஓவர்களில் 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. பெங்களூரு அணியின் ஆல் ரவுண்டர் எல்லீஸ் பெர்ரி மும்பை அணியின் விக்கெட் விழ முக்கிய காரணமாக அமைந்தார்.

- Advertisement -

ஒட்டுமொத்த அணியையே சீர்குலைத்த இவர், நான்கு ஓவர்கள் பந்துவீசி 26 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஆறு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 114 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களம் இறங்கியது.

ஆனால் பெங்களூர் அணியில் சற்று எதிர்பாராத விதமாக தொடக்கத்திலேயே மூன்று முக்கிய விக்கெடுகளை இழந்தது. 39 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையில் சற்று எதிர்பாராத பெங்களூர் அணிக்கு பந்துவீச்சில் கலக்கிய எல்லீஸ் பெர்ரியே மீண்டும் ஆபத்பாந்தவனாக பேட்டிங்கில் விளங்கினார்.

38 பந்துகளில் ஐந்து பௌண்டரி, ஒரு சிக்சர் என 40 ரன்கள் குவித்து பெங்களூர் அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.
இதனால் 15 ஓவர்களிலேயே பெங்களூரு அணி மூன்று விக்கெடுகளை இழந்து வெற்றி இலக்கினை எட்டியது.பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் கலக்கிய எல்லீஸ் பெர்ரியே ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

- Advertisement -

உலக சாதனைகள்: டி20 கிரிக்கெட்டில் 120 பந்துகள் மட்டுமே உள்ளதால் எந்த பேட்ஸ்மேனும் சதம் அடிக்க முடியாது என்ற நிலை இருந்தது. மேலும் பந்து வீச்சிலும் 24 பந்துகள் மட்டும் இருக்கும் நிலையில் பெரிய விக்கெட்டுகள் வீழ்த்த முடியாது என்பதனை இந்த ஆஸ்திரேலிய வீராங்கனை முறியடித்துக் காட்டியுள்ளார். அவர் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பெண்கள் பிக் பாஸ் லீக் போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு எதிராகவும், 2018 ஆம் ஆண்டு பிரிஸ்பேன்ஹீட் அணிக்கு எதிராகவும் சதம் விளாசியுள்ளார்.

இதையும் படிங்க: ஐசிசி டெஸ்ட் ரேங்கில் கோலியை தாண்டிய ரோகித்.. ஜெய்ஸ்வால் அஸ்வின் வேற லெவல் மாஸ்

மேலும் பந்துவீச்சிலும் புகழ்பெற்ற எல்லீஸ் பெர்ரி மெல்போன் ரினிகேட்ஸ் அணிக்கு எதிராகவும், தற்போது நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராகவும் 5 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றி அசத்தியுள்ளார். மேலும் மூன்று வடிவிலான கிரிக்கெட்டில் தலாஒரு சதம் அடித்தும், மேலும் பந்துவீச்சில் 6 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ள ஒரே வீராங்கனை என்ற உலக சாதனையையும் படைத்துள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 213, லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 147, டி20 கிரிக்கெட்டில் 103. அவரது சிறந்த பந்துவீச்சு புள்ளிவிவரங்கள் முறையே 6/32, 7/22 மற்றும் 6/15 ஆகும்.