ஐசிசி டெஸ்ட் ரேங்கில் கோலியை தாண்டிய ரோகித்.. ஜெய்ஸ்வால் அஸ்வின் வேற லெவல் மாஸ்

0
161
ICC

ரோகித் சர்மா தலைமையிலான இளம் இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நான்குக்கு ஒன்று என கைப்பற்றி அசத்தல் சாதனை செய்தது. இதன் காரணமாக ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியும் இந்திய வீரர்களும் புதிய சிறப்பான நிலையை எட்டி இருக்கிறார்கள்.

ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் 122 புள்ளிகள் எடுத்து இந்திய அணி முதல் இடத்தில் நீடிக்கிறது. 120 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும், 111 புள்ளிகள் உடன் இங்கிலாந்து மூன்றாவது இடத்திலும், 99 புள்ளிகள் உடன் தென் ஆப்பிரிக்கா நான்காவது இடத்திலும், 98 புள்ளிகள் உடன் நியூசிலாந்து ஐந்தாவது இடத்திலும், 89 புள்ளிகள் உடன் பாகிஸ்தான் ஆறாவது இடத்திலும் இருக்கின்றன.

- Advertisement -

டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் 870 புள்ளிகள் எடுத்து மீண்டும் முதல் இடத்தை கைப்பற்றி அசத்தியிருக்கிறார். முதல் இடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் ஜோஸ் ஹேசில்வுட் 847 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்திலும், இதே புள்ளியுடன் பும்ரா மூன்றாவது இடத்திலும், ரபாடா 834 புள்ளிகள் எடுத்து நான்காவது இடத்திலும், ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் 820 புள்ளிகள் எடுத்து ஐந்தாவது இடத்திலும் இருக்கிறார்கள். இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா 788 புள்ளிகள் எடுத்து ஏழாவது இடத்தில் இருக்கிறார்.

இதற்கடுத்து டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் சில வருடங்களுக்குப் பிறகு மூன்று இந்திய பேட்ஸ்மேன்கள் இடம் பெற்று இருக்கிறார்கள். இதில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் முதல் இடத்தில் 859 புள்ளிகள், அடுத்தடுத்த இடங்களில் ஜோ ரூட் 824, பாபர் அசாம் 768, டேரில் மிட்சல் 768, ஸ்டீவ் ஸ்மித் 757 புள்ளிகள் உடன் முதல் ஐந்து இடங்களில் இருக்கிறார்கள்.

இங்கிலாந்து தொடரின் சிறப்பாக செயல்பட்ட ரோஹித் சர்மா 751 புள்ளிகள் உடன் ஆறாவது இடத்திலும், ஜெய்ஸ்வால் 740 புள்ளிகள் உடன் எட்டாவது இடத்திலும், விராட் கோலி 737 புள்ளிகள் உடன் ஒன்பதாவது இடத்திலும் இருக்கிறார்கள். மேலும் இங்கிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட்ட இன்னொரு பேட்ஸ்மேன் ஆன சுப்மன் கில் 11 இடங்கள் முன்னேறி 664 புள்ளிகள் எடுத்து இருபதாவது இடத்திற்கு மேலே வந்திருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : 29 பந்தில் சதம் அடித்த வீரரை தூக்க திட்டம் போடும் டெல்லி.. சிஎஸ்கேவுக்கு ஏமாற்றம்

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசையில் இந்திய அணி முதல்இடத்திலும், இதே போல் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் 10 இடத்தில் மூன்று இந்திய பேட்ஸ்மேன்களும், பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் மூன்று இந்திய பந்துவீச்சாளர்கள் முதல் 10 இடங்களிலும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் எதிரொலியாக நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி முதல் இடத்தில் இருக்கிறது!