சுனில் நரைன் பவுலிங் பத்தி பேச மாட்டேன்.. அது என் பாலிசிக்கு தப்பு – அஸ்வின் பேச்சு

0
1509
Ashwin

நடப்பு ஐபிஎல் தொடர் உலக டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது. இந்த ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்கள் அணுகுமுறை மிகப்பெரிய அளவில் அதிரடியாக மாறி இருக்கிறது. இந்த நிலையில் பந்துவீச்சாளர்கள் பற்றிய ஒரு கேள்விக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் பரபரப்பான பதில் ஒன்றைக் கூறியிருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டு முதல் இம்பேக்ட் பிளேயர் விதி கொண்டுவரப்பட்டது. கடந்த வருடம் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட காரணத்தினால், அந்த விதியை எப்படி பயன்படுத்துவது? என்று எல்லா அணிகளும் சிந்தித்தன.

- Advertisement -

ஆனால் அந்த விதியை பயன்படுத்தி எப்படி விளையாடுவது சரியாக இருக்கும் என்று இந்த ஆண்டுதான் எல்லா அணிகளும் சிறப்பான தெளிவுக்கு வந்திருக்கிறார்கள். இந்த விதியின் மூலமாக கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை பெறுகின்ற காரணத்தினால், முதல் பந்தில் இருந்து அடிக்க ஆரம்பிப்பதும், அப்படி முதல் பந்தில் இருந்து அடிக்கக்கூடிய பேட்ஸ்மேன்களை முதலில் கொண்டு வருவதும் திட்டமாக மாறி இருக்கிறது.

இதன் காரணமாகவும், ஆடுகளங்கள் பேட்டிங் செய்ய சாதகமாக இருப்பதும், பவுண்டரி எல்லைகள் மிகவும் சிறியதாக இருப்பதும் பந்துவீச்சாளர்களுக்கு மிகப்பெரிய சிரமத்தை உண்டாக்குகிறது. இதன் காரணமாக பந்துவீச்சாளர்களை ஐபிஎல் தொடரில் இருந்து காப்பாற்ற வேண்டுமென ரவிச்சந்திரன் ஆஸ்வின் சில நாட்களாக பேசி வருகிறார்.

இந்த நிலையில் ரசிகர் ஒருவர் ரவிச்சந்திரன் அஸ்வினிடம் “டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன் விளையாட்டு என்று சொல்கிறீர்கள், ஆனால் பும்ரா மற்றும் சுனில் நரைன் இருவரும் பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்படுகிறார்கள். அப்படி அவர்கள் செயல்படும் பொழுது மற்றவர்களால் சிறப்பாக பந்து வீச முடியாதா? எனக் கேட்டிருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 உலககோப்பை 2024: இந்திய அணியில் மாற்றம் செய்ய முடியுமா.. விதி என்ன சொல்கிறது?

இதற்கு பதில் அளித்த ரவிச்சந்திரன் அஸ்வின் ” பும்ரா யார்க்கர்களை மிகத் துல்லியமாக செயல்படுத்துகிறார், அவருடைய ரிலீஸ் பாயிண்ட்சிறப்பாக இருக்கிறது, எனவே அவர் சிறப்பாக இருக்கிறார். அதே சமயத்தில் நான் சுனில் பந்து வீச்சு பற்றி பேசமாட்டேன். அது என் பாலிசிக்கு தவறானது” எனக் கூறியிருக்கிறார். சுனில் நரைனின் பவுலிங் ஆக்சன் பற்றி அஸ்வினுக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை என்பதாக தெரிகிறது. தற்போது சுனில் நரைன் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், அஸ்வினின் கருத்து மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. சமூக வலைதளங்களில் விவாதமாகிக் கொண்டும் இருப்பதும் குறிப்பிடத்தக்கது!