56 போட்டிகள்.. டி20 உலககோப்பை.. சிஎஸ்கே ஷிவம் துபேவுக்கு நடந்த வினோத சோகம்

0
1071
Shivam

நடப்பு ஐபிஎல் தொடரின் 53வது போட்டியில் இமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் சிஎஸ்கே அணியின் ஷிவம் துபேவுக்கு வித்தியாசமான சோகமான நிகழ்வு நடைபெற்றிருக்கிறது.

இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். வழக்கம்போல் சிஎஸ்கே கேப்டன் ருதூராஜ் இந்த முறையும் டாஸ் வெல்லவில்லை. பகலில் நடைபெறும் போட்டி என்பதால் டாஸ் ஒரு பெரிய காரணியாக இருக்காது என்பது அவர்களுக்கு நல்ல விஷயமாக அமைந்தது.

- Advertisement -

இந்த போட்டியிலும் துவக்க வீரராக வந்த ரகானே 7 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து கேப்டன் ருதுராஜ் உடன் டேரில் மிட்சல் ஜோடி சேர்ந்தார். இவர்கள் பவர் பிளேவில் சிறப்பாக விளையாடி, முதல் ஆறு ஓவர்களுக்கு 60 ரன்கள் எடுத்தார்கள். சிஎஸ்கே அணி சிறப்பான துவக்கம் கண்டது.

இதற்கு அடுத்து எட்டாவது ஓவருக்கு சுழல் பந்துவீச்சாளர் ராகுல் சாஹர் பந்து வீச்சுக்கு வந்ததும் எல்லாம் தலைகீழாக மாறியது. அந்த ஓவரின் முதல் பந்தியிலேயே விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மாவிடம் 21 பந்தில் 32 ரன்கள் எடுத்து ருதுராஜ் ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து விளையாட வந்த ஷிவம் துபே கேப்டன் ருதுராஜ் போலவே ஒரு கட் ஷாட் விளையாட ஆசைப்பட்டு, தான் சந்தித்த முதல் பந்திலேயே விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மாவிடம் கேட்ச் ஆகி கோல்டன் டக் அடித்தார். கடந்த பஞ்சாப் அணிக்கு எதிராக ஹர்பரித் பிரார் பந்தில் கோல்டன் டக் ஆகி இருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : சுனில் நரைன் பவுலிங் பத்தி பேச மாட்டேன்.. அது என் பாலிசிக்கு தப்பு – அஸ்வின் பேச்சு

டி20 உலகக்கோப்பைக்கு ஷிவம் துபே தேர்வாவதற்கு முன்னால் 56 இன்னிங்ஸ்களாக சிவம் துபே கோல்டன் டக் ஆனதில்லை. ஆனால் அவர் டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பெற்றவுடன் தொடர்ந்து இரண்டு முறை கோல்டன் டக் ஆகியிருக்கிறார். தற்போது அவருக்கு இது தனிப்பட்ட முறையில் மட்டுமல்லாது, சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமில்லாது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் சோகமான முடிவாக அமைந்திருக்கிறது!