சிஎஸ்கே-க்கு பாடம் எடுத்த டெல்லி.. அடுத்த மேட்ச்லயாவது சரி செய்வாங்களா?.. களத்தில் பிரமிப்பு

0
573
Stubbs

இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி மிகவும் பரபரப்பாக சென்றது. இந்த போட்டியில் நான்கு ரன் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி பெற்றது. இந்த வெற்றியில் மிகப்பெரிய ஒரு பில்டிங் பங்களிப்பை டிரிஸ்டன் ஸ்டப்ஸ் கொடுத்திருக்கிறார்.

இன்று டாஸ் தோற்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் மூன்று விக்கெட்டுகளை 43 ரன்களுக்கு அந்த அணி இழந்தது. இந்த முறை டெல்லி அணிக்கு மூன்றாவது இடத்தில் அக்சர் படேல் அனுப்பப்பட்டார். அவருடன் இணைந்து 68 பந்தில் 113 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை ரிஷப் பண்ட் அமைத்தார். மேலும் ரிஷப் பண்ட் 43 பந்தில் 88 ரன்கள் எடுக்க, டெல்லி அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணிக்கு கடைசி இரண்டு ஓவரில் வெற்றிக்கு 36 ரன்கள் தேவைப்பட்டது. இந்த போட்டியில் முதல் மூன்று ஓவர்களில் இரண்டு விக்கெட் கைப்பற்றி இருந்த ராசிக் சலாம் இடம் 19ஆவது ஓவரை கேப்டன் ரிஷப் பண்ட் கொடுத்தார். வெளியில் அனுபவ வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தும் உள்நாட்டு வேகப் பந்துவீச்சாளரை ரிஷப் பண்ட் நம்பினார்.

ராசிக் சலாமின் அந்த ஓவரின் முதல் பந்தை ரஷித் கான் பவுண்டரி அடித்தார். இரண்டாவது பந்தை அவர் நேராக தூக்கி அடிக்க, பந்து ஏறக்குறைய சிக்ஸருக்கு சென்று விட்டது என எல்லோரும் நினைத்தார்கள். இந்த நேரத்தில் லாங் ஆஃப்பில் பீல்டிங் நின்றிருந்த தென் ஆப்பிரிக்காவின் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் பந்தை பாய்ந்து பிடித்து, எல்லைக் கோட்டுக்கு உள்ளே வீசிவிட்டு வெளியில் விழுந்தார். முடிவில் அந்தப் பந்தில் ஒரு ரன் மட்டுமே குஜராத் அணிக்கு கிடைத்தது. அவர் மொத்தம் ஐந்து ரன்களை காப்பாற்றினார்.

இந்தப் போட்டியில் முடிவில் டெல்லி அணி கடைசியில் நான்கு ரன்கள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றது. தற்பொழுது ஒரே ஒரு சிறப்பான பீல்டிங் முயற்சியால், தனி ஒரு வீரராக டிரிஸ்டன் ஸ்டப்ஸ் டெல்லி அணியை வெற்றி பெற வைத்திருக்கிறார். இவரது சிறப்பான முயற்சியையும், தீபக் சாஹர் கையில் இருந்த கேட்ச் மற்றும் பவுண்டரியை நேற்று லக்னோ அணிக்கு எதிராக விட்டு, சிஎஸ்கே அணி தோற்றத்தையும் ரசிகர்கள் சேர்த்து வைத்து விமர்சனம் செய்து வருகிறார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : 43/3.. இந்த நேரத்துல என் பிளான் இதுவாதான் இருந்தது.. அக்சர்கிட்ட சொல்லி செஞ்சேன் – ரிஷப் பண்ட் பேட்டி

நேற்றைய போட்டியில் தீபக் ஹூடா அடித்த பந்தை கேட்ச் பிடிக்காமல் சிக்ஸருக்கும் விட்டு, அடுத்து பதிரனாவின் 19ஆவது ஓவரில் தீபக் ஹூடாவுக்கு மீண்டும் ஒரு பவுண்டரியை விட்டு, தீபக் சாஹர் பீல்டிங்கில் மிக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். இது சிஎஸ்கே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. எனவே அடுத்த போட்டியில் ஆவது சிஎஸ்கே இப்படியான தவறுகளை செய்யாமல் இருக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.