43/3.. இந்த நேரத்துல என் பிளான் இதுவாதான் இருந்தது.. அக்சர்கிட்ட சொல்லி செஞ்சேன் – ரிஷப் பண்ட் பேட்டி

0
141
Rishabh

இன்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக தங்கள் சொந்த மைதானத்தில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டின் பங்கு பெரிய அளவில் இருக்கிறது. வெற்றிக்குப் பின் திட்டங்கள் குறித்து ரிஷப் பண்ட் பேசியிருக்கிறார்.

இன்றைய போட்டியில் முதலில் டாஸ் தோற்று பேட்டிங் செய்த டெல்லி அணிக்கு கேப்டன் ரிஷப் பண்ட் 43 பந்தில் 88 ரன்கள், அக்சர் படேல் 43 பந்தில் 66 ரன்கள் எடுத்தார்கள். மேலும் இந்த ஜோடி 68 பந்தில் 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. டெல்லி அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் குவித்தது.

- Advertisement -

தொடர்ந்து விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 36 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நேரத்தில் அன்ட்ரிச் நோர்க்கியா மற்றும் கலீல் அகமது ஆகியோருக்கு ஓவர்கள் இருந்த பொழுது, கேப்டன் ரிஷப் பண்ட் 19 ஆவது ஓவரை ராசிக் சலாம் இடம் கொடுத்தார். அவர் 17 ரன்கள் தந்து ஒரு விக்கெட் அந்த இடத்தில் கைப்பற்றினார். மேலும் கடைசி ஓவரில் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டபோது, கடைசி ஓவரை முழுமையாக சந்தித்த ரஷீத் கான் 14 ரன்கள் மட்டுமே எடுக்க, டெல்லி அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெற்றிக்குப் பின் பேசிய டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் “அன்றிச் நோர்க்கியா கொஞ்சம் கடினமான நேரத்தை அனுபவித்தார். டி20 கிரிக்கெட் ஒரு வேடிக்கையான விளையாட்டு. 14 -15 ஓவர்கள் கழித்து விளையாடுவதற்கு பந்து நன்றாக வந்தது. எனவே இன்றைய போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ராசிக் சலாம் இடம் 19வது ஓரை கொடுத்தேன்.

குறிப்பிட்ட போட்டியில் சிறப்பாக பந்து வீசக்கூடியவர்களை நம்புவது வழக்கம். இது ஒரு கேப்டனாக என்னுடைய உள்ளுணர்வை பற்றியது என்று நினைக்கிறேன். இப்படியான உள்ளுணர்வுசில நேரங்களில் வேலை செய்யும். இன்று பலன் அளித்ததில் மகிழ்ச்சி. 43 ரன்னுக்கு மூன்று விக்கெட் என்று இருந்த நிலையில் அவர்களது முக்கிய ஸ்பின்னர்களை வைக்க நினைத்தேன். ஏதாவது கிடைத்தால் எடுத்துக் கொண்டு ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்ய பார்த்தோம்.

- Advertisement -

இதையும் படிங்க : ரொம்ப ஏமாற்றமா இருக்கு.. இந்த மாதிரி கிரவுண்ட் பிட்ச்ல இத செய்யாம ஜெயிக்க முடியாது – சுப்மன் கில் பேட்டி

நான் விளையாட்டுக்குள் இருக்கும் ஒவ்வொரு நேரமும் மிக நன்றாக உணர்கிறேன். மைதானத்தில் இருக்கும் ஒவ்வொரு மணி நேரமும் மிக முக்கியமானது. நான் களத்தில் இருப்பதை விரும்புகிறேன், களத்தில் 100% கொடுக்கவும் விரும்புகிறேன்.சில நேரங்களில் பவுண்டரி சிக்சர் வருவதற்கு நேரம் எடுக்கும். இன்று என்னுடைய முதல் சிக்சர் எனக்கு நம்பிக்கையை கொடுத்தது. நான் களத்தில் அதிக நேரம் செலவிட்டு, என்னை நன்றாக உணர்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.