ஒரு விஷயம் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.. அபிஷேக் இந்திய கிரிக்கெட்டுக்கு பெரிய ஆள் – டிராவிஸ் ஹெட் பேச்சு

0
647
Head

நேற்று ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் மற்றும் லக்னோ அணிகள் மோதிய போட்டியில் ஹைதராபாத் துவக்க ஆட்டக்காரர்கள் ருத்ர தாண்டவம் ஆடினார்கள். இதில் சக துவக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா பற்றி மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் பேசியிருக்கிறார்.

குறிப்பிட்ட இந்த போட்டியில் நேற்று டாஸ் வென்று முதலில் லக்னோ அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு கொஞ்சம் கடினமாக மெதுவாக இருப்பது போல் கிரிக்கெட் வர்ணனையில் கூறப்பட்டது.

- Advertisement -

இப்படியான நிலையில் இலக்கை நோக்கி களம் இறங்கிய ஹைதராபாத் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் சந்தித்த முதல் பந்துகளில் இருந்து மைதானத்தின் எல்லா பக்கத்திலும் அடித்து நொறுக்கிறார்கள். பேட்டில் படுகின்ற பந்துகள் பவுண்டரியும் சிக்ஸர்களுமாக பறந்தன. அவர்களை லக்னோ பந்துவீச்சாளர்கள் மற்றும் கேப்டனால் எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியவில்லை.

இறுதி வரை ஆட்டம் நடக்காத இருவரும் 9.4 ஓவரில் 167 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்ததோடு போட்டியையும் வென்றார்கள். ஹெட் 30 பந்தில் 89 ரன், அபிஷேக் ஷர்மா 28 பந்தில் 75 ரன்கள் எடுத்தார்கள். 150 ரன்னுக்கு மேலான இலக்கை, மிகக் குறைந்த ஓவரில் எட்டிய சாதனை ஐபிஎல் போட்டியாக இது அமைந்தது.

போட்டிக்குப் பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய டிராவிஸ் ஹெட் கூறும்பொழுது “அபிஷேக் உடனான பார்ட்னர்ஷிப் அற்புதமானது. அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு மிகவும் திறமையான இளம் உற்சாகமான திறமைசாலி. நாங்கள் ஒருவரை ஒருவர் நன்றாக ஆதரித்து விளையாடுகிறோம். அவர் என்னைச் சுற்றி இருப்பது நல்ல விஷயம். அவர் எப்பொழுதும் விளையாட்டு பற்றி மட்டுமே சிந்திக்கிறார். அவருக்கு நிறைய ஆற்றல் இருக்கிறது. நாங்கள் இருவரும் நல்ல ஒரு கூட்டு.

- Advertisement -

இதையும் படிங்க : இதை டிவிலதான் பார்த்து இருக்கேங்க.. 260 ரன் எடுத்திருந்தாலும்.. இந்த ஜோடி திருப்பி அடிக்கும் – கேஎல் ராகுல் பேட்டி

நீங்கள் விளையாடும் போதெல்லாம் முடிந்தவரை சீராக இருக்க வேண்டும். நீங்கள் ரன்கள் எடுப்பதற்காக விளையாடுகிறீர்கள். தற்போது ரன்களுக்கு மத்தியில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் நான் நேற்று சுழல் பந்துவீச்சை விளையாடிய விதத்தில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நான் தற்போது கடினமாக பயிற்சி செய்து வந்தாலும், கடந்த இரண்டு வருடங்களாக உழைத்ததற்கான பலன் கிடைத்துக் கொண்டிருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.