இதை டிவிலதான் பார்த்து இருக்கேங்க.. 260 ரன் எடுத்திருந்தாலும்.. இந்த ஜோடி திருப்பி அடிக்கும் – கேஎல் ராகுல் பேட்டி

0
372
Rahul

நடப்பு 17வது ஐபிஎல் சீசனில் நேற்று லக்னோ அணி, ஹைதராபாத் அணியின் சொந்த மைதானத்தில் அவர்களிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கான காரணங்கள் குறித்து லக்னோ அணியின் கேப்டன் கேஎல்.ராகுல் பேசியிருக்கிறார்

நேற்றைய போட்டியில் டாஸ் வென்று கேப்டன் கேஎல்.ராகுல் முதலில் பேட்டிங் செய்வது என முடிவு செய்தார். ஆனால் அந்த முடிவுக்கு தகுந்தபடி அணியின் பேட்ஸ்மேன்களோ அவரோ விளையாடவில்லை. பவர் பிளேவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து அந்த அணி மொத்தம் 27 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

மேலும் தொடர்ந்து விளையாடிய லக்னோ அணி 10 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த நிலையில் கேப்டன் கேஎல்.ராகுல் 33 பந்துகளை சந்தித்து, பந்துக்குப் பந்து கூட ரன் எடுக்காமல் 29 ரன் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். இறுதியில் அந்த அணி பூரன் மற்றும் பதோனி அதிரடியில் நான்கு விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது.

அடுத்து விளையாடிய ஹைதராபாத் அணியின் துவக்க ஆட்டக்காரர்களோ பவர் பிளேவில் மட்டுமே விக்கெட் இழப்பில்லாமல் 107 ரன்கள் எடுத்தார்கள். அங்கேயே லக்னோ தோற்றுவிட்டது. ஹெட் 30 பந்தில் 89, அபிஷேக் ஷர்மா 28 பந்தில் 75 ரன்கள் எடுத்து, 9.4 ஓவரில் விக்கெட் இழப்பில்லாமல் அணியை வெற்றி பெற வைத்தார்கள்.

தோல்விக்கு பின் பேசிய கேஎல்.ராகுல் கூறும் பொழுது “என்ன சொல்வதென்று என்னிடம் வார்த்தைகளே இல்லை. இப்படியான பேட்டிங்கை நான் டிவியில்தான் பார்த்திருக்கிறேன். இது ஒரு நம்ப முடியாத பேட்டிங். அவர்கள் எல்லா பந்தையும் பேட்டின் நடுப்பகுதியில் அடிப்பது போல் இருந்தது. அவர்களின் திறமைக்கு பாராட்டுக்கள். அவர்கள் தங்கள் சிக்ஸர் அடிக்கும் திறமைக்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள். நாங்கள் பந்து வீசும் போது ஆடுகளம் எப்படி இருக்கிறது என்று அறிந்து கொள்வதற்கு அவர்கள் நேரமே தரவில்லை. அவர்கள் டீல் செய்த விதத்தில் தடுப்பது கடினமாக இருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க: பவுலரான நான் ஹெட் அபிக்கு என்ன சொல்றது.. இவங்களுக்கு பந்து போடவே முடியாது – பாட் கம்மின்ஸ் பேட்டி

நீங்கள் தோல்வி அடையும் பொழுது நீங்கள் எடுத்த முடிவுகள் குறித்து கேள்விகள் வரும். நாங்கள் 40 முதல் 50 ரன்கள் குறைவாக இருந்தோம். பவர் பிளேவில் விக்கெட்டுகள் இழந்ததால் எங்களால் வேகத்தை தொடர முடியவில்லை. பூரன் மற்றும் பதோனி விளையாடி 165 ரன்னுக்கு கொண்டு வந்தார்கள். ஆனால் நாங்கள் 240 ரன்கள் எடுத்திருந்தாலும் கூட இந்த ஜோடி அந்த ரன்களை துரத்தி இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.