இது நாங்க விட்டுட்டு வந்த மும்பை அணி கிடையாது.. யாருக்குமே பொறுப்பே இல்ல.. ஏத்துக்க முடியல – ஹர்பஜன் சிங் பேட்டி

0
66
Harbhajan

நடப்பு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி பட்டியலில் 10வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மிக வெற்றிகரமான அணி என பெயர் எடுத்த அந்த அணிக்கு இது மிகவும் சோதனையான காலமாக அமைந்திருக்கிறது. இது குறித்து அந்த அணியின் பழைய வீரர் ஹர்பஜன் சிங் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்த ஐபிஎல் தொடருக்கு கேப்டன் பொறுப்பில் ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு, புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை கொண்டு வந்தது பெரிய பின்னடைவுகளை உண்டாக்கியது. அதே சமயத்தில் எந்த ஒரு வீரர்களும் பெரிய அளவில் அணிக்காக விளையாடவில்லை என்பதும் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து ஹர்பஜன் சிங் பேசும்பொழுது “நாங்கள் பல வருடங்களாக பார்த்திராத வித்தியாசமான அணியாக இது இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி எப்பொழுதும் நல்ல கிரிக்கெட்டை விளையாடுவதற்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் ஆக்ரோஷமான கிரிக்கெட்டை விளையாடுவார்கள். அவர்கள் ஒவ்வொரு வருடமும் வெல்வார்கள் என்பது கிடையாது. ஆனால் அவர்கள் களத்தில் எப்பொழுதும் சண்டை செய்வார்கள். இந்த முறை அதை பார்க்க முடியவில்லை.

நாங்கள் விட்டுச் சென்ற மும்பை அணி இது நிச்சயமாக கிடையாது. இந்த அணி சரியாக விளையாட விட்டாலும் கூட முதல் நான்கு இடங்களுக்குள் வரும். இல்லையென்றால் ஐந்து முதல் ஆறாவது இடத்தில் வரும் என்று நினைப்போம். ஆனால் உண்மை என்னவென்றால் இன்னும் அணிகள் அதிகமாக ஐபிஎல் தொடரில் இருந்திருந்தால், இந்த மும்பை இந்தியன்ஸ் அணி இன்னும் கீழே இருந்திருக்கும்.

- Advertisement -

ஹர்திக் பாண்டியா இந்த அணிக்கு அழைத்து வரப்பட்டதை நான் புரிந்து கொள்கிறேன். அதனால் ஒரு பெரிய மாற்றம் காணப்பட்டது. அதே சமயத்தில் ஹர்திக் பாண்டியா கொண்டுவரப்பட்ட முடிவை ஒதுக்கி வைத்து விட்டு பார்த்தால், எந்த வீரர்களும் பொறுப்பு எடுத்துக் கொண்டு விளையாடவில்லை. அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட கிரிக்கெட்டை விளையாடவில்லை.

இதையும் படிங்க: ரோகித் சர்மா மும்பை அணியை விட்டு விலகுகிறாரா?.. பயிற்சியாளர் பவுச்சர் சூசகமான பதில்.. ரசிகர்கள் கோபம்

பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என இந்த அணி எல்லா வகையிலும் சிதறியதாக இருந்தது. மகிழ்ச்சி இல்லாத அணி இப்படித்தான் விளையாடும். இது முடிவுகளில் இருந்து தெளிவாகத் தெரிகிறது. முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய பொழுதே எல்லாம் தெளிவாகத் தெரிந்தது. இவர்கள் பரஸ்பரம் கலந்து மகிழ்ச்சியாக விளையாடவில்லை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -