“எழுதி வைங்க.. நாளை மேட்ச்.. இந்திய அணிக்கு எக்ஸ்-பேக்டர் இந்த 29 வயது வீரர்தான்” – ஏபி.டிவில்லியர்ஸ் கணிப்பு

0
86
Devilliers

இந்திய அணி தற்பொழுது தங்களுடைய மூன்று மிக முக்கியமான நட்சத்திர வீரர்களை டெஸ்ட் கிரிக்கெட் அணியில் துரதிஷ்டவசமாக தவறவிடுகின்ற காரணத்தினால், பெரிய தலைவலியை சந்தித்து வருகிறது.

நாளை துவங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு எப்படியான விளையாடும் இந்திய அணியை அமைப்பது என்பது குறித்து வெளியில் இருந்து நிறைய கருத்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன.

- Advertisement -

பொதுவாக இந்திய பேட்ஸ்மேன்கள் சுழல் பந்துவீச்சை மிகச் சிறப்பாக எதிர் கொண்டு விளையாடுவார்கள். இதன் காரணமாக சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை அமைப்பது எளிதான ஒன்றாக இருந்தது.

ஆனால் தற்பொழுது இந்திய பேட்ஸ்மேன்கள் டி20 கிரிக்கெட்டின் வருகையால் சுழல் பந்துவீச்சை விளையாடுவதில் நிறைய பின்னடைவை சந்தித்து இருக்கிறார்கள். இதனால் இந்தியாவில் சுழல் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் ஆடுகளங்களை அமைப்பதும் இந்தியாவுக்கு பிரச்சனையாக இருக்கிறது.

- Advertisement -

இதன் காரணமாக எப்படியான ஆடுகளங்கள் அமைப்பது? எந்த மாதிரியான பிளேயிங் லெவனை உருவாக்குவது? என்பதில் குழப்பங்கள் நீடிக்கிறது. இங்கிலாந்து போல ஒரே சுழற் பந்துவீச்சாளருடன் இந்தியா விளையாடுமா? என்பதும் முக்கிய எதிர்பார்ப்பில் ஒன்று.

தற்பொழுது மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் என்றால் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் அக்சர் படேல் இருவரும் வந்துவிடுவார்கள். இந்த நிலையில் மூன்றாவது சுழற் பந்துவீச்சாளருக்கான இடத்தை குல்தீப் யாதவ் இல்லை வாஷிங்டன் சுந்தர் இருவரில் ஒருவருக்குத்தான் தருவார்கள். அந்த இடத்தை யாருக்கு தரலாம் என ஏபி.டிவில்லியர்ஸ் தன்னுடைய கருத்தை முன் வைத்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவை நாம் தவற விடுவது எவ்வளவு பெரிய இழப்பு என்று நாம் அனைவருமே புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். ரவீந்திர ஜடேஜா ஒரு சூப்பர் ஸ்டார். அவர் முதல் டெஸ்ட் போட்டியில் மிகச் சிறப்பாக இருப்பார் என்று நான் நினைத்திருந்தேன்.

அவர் பந்தை எப்பொழுதும் கொஞ்சம் வேகமாக ஸ்டெம்ப் நோக்கி வீசுவார். சில பந்துகள் திரும்பும் சில பந்துகள் திரும்பாது. இதன் காரணமாக அவர் ஒரு டெஸ்ட் போட்டியில் 5 மற்றும் 10 விக்கெட்டுகள் எடுப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

அவர் மாதிரியான ஒரு வீரருக்கு மாற்று வீரரை கொண்டு வருவது கடினமான ஒன்று. அவர் பீல்டிங்கில் மிகவும் வேகமானவர்.உங்களை ரன் அவுட் செய்வார். கேப்டனுக்கு உதவிகரமாக இருப்பார். மேலும் மிகச் சிறப்பாக பேட்டிங்கும் செய்வார்.

இதையும் படிங்க : “2வது டெஸ்ட்.. ஹர்பஜன் வெளியிட்ட மாஸ் உத்தேச இந்திய பிளேயிங் லெவன்.. முக்கிய வீரருக்கு இடம் இல்லை

ரவீந்திர ஜடேஜாவின் இடத்தை கொடுப்பதாக இருந்தால் அது குல்தீப் யாதவுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும். அவர் பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் உங்களுக்கு நிறைய செய்ய மாட்டார். ஆனால் பந்துவீச்சில் நிறைய எக்ஸ்பேக்டரை வைத்திருக்கிறார். அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எக்ஸ்பேக்டராக இருப்பார். அஸ்வின் மற்றும் அக்சர் என இரண்டு வகையான பந்துவீச்சாளர்கள் இருக்க, இவர் மூன்றாவது வகை பந்துவீச்சாளராக இணைவார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -