“2வது டெஸ்ட்.. ஹர்பஜன் வெளியிட்ட மாஸ் உத்தேச இந்திய பிளேயிங் லெவன்.. முக்கிய வீரருக்கு இடம் இல்லை

0
104
Harbajan

இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை இந்தியாவில் வைத்து வெல்ல, இந்த டெஸ்ட் தொடருக்கு எதிர்பார்ப்பு இந்தியாவை தாண்டி உலக அளவில் பரவி இருக்கிறது.

கிரிக்கெட்டை மிக தீவிரமாக பின்பற்றக்கூடிய கிரிக்கெட் ரசிகர்கள் இந்தத் தொடரின் முடிவுகளை அறிந்து கொள்வதற்கு மிகவும் ஆவலாக இருக்கிறார்கள். இங்கிலாந்து அணி இங்கு தொடரை வெல்லும் பட்சத்தில், அதிரடியாக டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடும் முறைக்கு நிறைய ஆதரவுகள் கிடைக்க ஆரம்பிக்கும். எனவே இந்த தொடர் மிகக் கூர்மையாக உலகக் கிரிக்கெட்டில் கவனிக்கப்படுகிறது.

- Advertisement -

எனவே இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நாளை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானத்தில் துவங்க இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் விளையாடப் பட இருக்கிறது.

இந்த டெஸ்ட் தொடரில் மூன்று முக்கிய இந்திய வீரர்கள் வெளியேறியிருக்க, ரஜத் பட்டிதார் மற்றும் சர்ப்ராஸ் கான் என இரண்டு புதிய இளம் இந்திய பேட்ஸ்மேன்கள் அணிக்குள் வந்திருக்கிறார்கள்.

ஒரு சில இந்திய முன்னால் வீரர்கள் இந்த இரண்டு பேட்ஸ்மேன்களும் அணியில் இடம் பெற வேண்டும் என கருத்துக்களை முன் வைத்திருக்கிறார்கள். ஆனால் ஹர்பஜன் சிங் தன்னுடைய பிளேயிங் லெவனில் சர்ப்ராஸ் கானுக்கு வாய்ப்பு கொடுத்து, ரஜத் பட்டிதாரை வெளியில் வைத்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

மேலும் அவர் இது குறித்து கூறும் பொழுது “சப்ராஸ்கான் ஐந்தாவது இடத்தில் விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் தற்பொழுது இந்தியா வந்திருக்கும் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராகவும் நிறைய ரன்கள் குவித்திருக்கிறார்.

ரவீந்திர ஜடேஜா இடத்துக்கு வாஷிங்டன் சுந்தர் விளையாட வேண்டும். மேலும் பதினோராவது வீரர் குல்தீப் யாதவ். அவரிடம் நிறைய வேரியேஷன் இருக்கிறது. அதே சமயத்தில் ஆடுகளத்தில் வேகம் எடுபடும் என்றால் சிராஜை வைத்துக் கொள்ளலாம். இல்லையென்றால் குல்தீப் யாதவ்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : “இங்கிலாந்து அணியை வீழ்த்த.. புது ரெண்டு பசங்களாலதான் முடியும்.. காரணம் இதான்” – ஆகாஷ் சோப்ரா அதிரடி

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான ஹர்பஜன் சிங்கின் உத்தேச இந்திய பிளேயிங் லெவன்

ரோஹித் சர்மா (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், ஷ்ரேயாஸ் லியர், சர்பராஸ் கான், வாஷிங்டன் சுந்தர், கே.எஸ் பரத்(வி. கீ), அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ்.