2024 ஐபிஎல்.. முதல் 2 போட்டியில் விளையாட வாய்ப்பு குறைவான 3 நட்சத்திர வீரர்கள்

0
29
Ipl2024

ஐபிஎல் தொடர் நெருங்க நெருங்க ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பும் உற்சாகமும் பெருகிக்கொண்டே இருப்பது போல, அதை குறைக்கும் விதமாக வீரர்களின் காயம் பற்றிய செய்தியும் வரிசையாக வர ஆரம்பிக்கும். ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் இது எப்பொழுதும் வாடிக்கையான விஷயம். சில அணிகள் சில ஐபிஎல் சீசன்களில் தங்களின் முதுகெலும்பான வீரரையே இழக்க வேண்டியதும் வந்திருக்கிறது.

இதேபோல் சில வீரர்கள் தங்களின் சொந்த காரணங்களுக்காக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறி, குறிப்பிட்ட அணி நிர்வாகங்கள் மற்றும் அந்த அணியின் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுப்பார்கள். குறிப்பாக இதை இங்கிலாந்து வீரர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். இதில் முக்கியமானவர் ஜேசன் ராய் மற்றும் அலெக்ஸ் ஹேலஸ்.

- Advertisement -

இன்னொரு பக்கத்தில் சில வீரர்கள் ஐபிஎல் தொடருக்கு முன்பாக காயம் அடைந்து, ஐபிஎல் தொடரின் சில போட்டிகளை தவறவிடக்கூடிய நிலையில் இருப்பார்கள். அவர்கள் முக்கியமான வீரர்களாக இருக்கும் பொழுது, அவர்களை அணியை விட்டு நீக்கி புதிய வீரர்களை அணி நிர்வாகத்தால் தேர்ந்தெடுக்க முடியாது. எனவே அவர்கள் வரும் வரையில் அணி நிர்வாகங்கள் காத்திருக்கும்.

இந்த வகையில் எடுத்துக் கொண்டால் இந்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிகரமான இடது கை துவக்க ஆட்டக்காரர் நியூசிலாந்தின் கான்வே ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியில்தான் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. முக்கியமான அந்தக் கட்டத்தில் கிரிக்கெட் விளையாடாமல் அவர் உள்ளே வருவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நல்லது கிடையாது. ஆனாலும் கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மாற்று வீரருக்கு செல்லவில்லை. மேலும் இந்த தொடரில் சிறிய காயங்களால் முதல் இரண்டு போட்டிகளை மூன்று முக்கியமான வீரர்கள் தவறவிட இருக்கிறார்கள். அவர்கள் யார் என்று பார்ப்போம்.

மதிஷா பதிரனா :

- Advertisement -

இலங்கையைச் சேர்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் ஸ்லிங் பவுலிங் ஆக்சன் வகையை கொண்ட இளம் வேகபந்துவீச்சாளர். தற்பொழுது பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரில், தொடை பகுதியில் ஏற்பட்ட காயத்தால், மேற்கொண்டு ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு தேர்வு செய்யாமல் விலக்கி வைக்கப்பட்டு இருக்கிறார். மேலும் ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களுக்கு இவர் கிடைக்காமல் போவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.

சூரியகுமார் யாதவ் :

ஐபிஎல் தொடரில் எல்லா அணியின் ரசிகர்களும் இவரது பேட்டிங்கை பார்க்க காத்திருப்பார்கள். தற்போதைய டி20 கிரிக்கெட் உலகில் சூரியகுமார் யாதவ்தான் சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேன். 360 டிகிரியில் இவர் பேட்டிங் செய்யும் முறைக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. தற்பொழுது ஹெர்னியா பிரச்சனைக்கு அறுவை சிகிச்சை செய்திருக்கும் இவர், முதல் இரண்டு போட்டிக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கிடைக்க மாட்டார் என்று ஓரளவுக்கு உறுதியான தகவல்கள் கூறுகின்றன.

இதையும் படிங்க : ரஞ்சி டிராபி 2024: ஐபிஎல் போல கோடியில் பரிசு.. விருதுகள் மற்றும் பரிசுத்தொகை முழு விவரம்..

ஸ்ரேயாஸ் ஐயர் :

இவருக்கு முதுகு பகுதியில் ஏற்பட்டிருக்கும் காயம் இவருக்கு கிரிக்கெட் வாழ்க்கையில் பெரிய பிரச்சனைகளை கொண்டு வருகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட இவர், முதுகு வலியின் காரணமாக ஐபிஎல் தொடரின் கால் இறுதியில் மும்பை அணிக்காக விளையாடவில்லை. ஆனால் இவர் உள்நாட்டு கிரிக்கெட்டை புறக்கணித்ததாக சம்பள பட்டியலில் இருந்து பிசிசிஐ வெளியேற்றியது. இந்த நிலையில் ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் முதுகு வலி காரணமாக வெளியேறி இருக்கிறார். இவர் உறுதியாக முதல் இரண்டு ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கிடைக்க மாட்டார் என்று கூறப்படுகிறது.