ரஞ்சி டிராபி 2024: ஐபிஎல் போல கோடியில் பரிசு.. விருதுகள் மற்றும் பரிசுத்தொகை முழு விவரம்..

0
66
Ranji

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான ரஞ்சி டிராபி சீசனின் இறுதிப் போட்டியில் விதர்பா அணியை 169 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 42 ஆவது முறையாக ரஞ்சித் டிராபிக் சாம்பியன் பட்டத்தை மும்பை அணி உயர்த்தி இருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்ற இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் மும்பை 224 ரன்கள் எடுக்க, விதர்பா அணி 105 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. இதற்கு அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் மிகச் சிறப்பாக விளையாடிய மும்பை அணி 418 ரன்கள் குவித்து, ரஞ்சித் டிராபி சாம்பியன் ஆவதற்கான அடித்தளத்தை வலிமையாக உருவாக்கியது.

- Advertisement -

இந்த நிலையில் 538 ரன்கள் என்கின்ற மெகா இலக்கை நோக்கி விளையாடிய விதர்பா அணி முடிந்த வரையில் போராடி 368 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது. இதன் காரணமாக மும்பை அணி 169 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த ஆண்டின் ரஞ்சி சீசன் பட்டத்தை அதிரடியாக கைப்பற்றியது.

மும்பை அணிக்கு இந்த முறை டாப் ஆர்டரில் இருந்து பெரிய அளவில் ஸ்கோர் வரவில்லை. மேலும் மிடில் ஆர்டரும் கொஞ்சம் சொதப்பலாகவே விளையாடியது. ஆனாலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் லோயர் ஆர்டர் பேட்டிங் அமர்க்களம் ஆக இருந்தது. ரஞ்சி டிராபி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் மிகச் சிறப்பாக கீழ் வரிசையில் வந்தவர்கள் விளையாடினார்கள்

நடைபெற்ற முடிந்த இறுதிப்போட்டியில் ஆட்டநாயகனாக முசிர் கான் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பேட்டிங்கில் இரண்டாவது இன்னிங்ஸில் 136 ரன்கள், இரண்டாவது இன்னிங்ஸ் பந்துவீச்சில் மிக முக்கியமான இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். மும்பை அணியின் சுழல் பந்துவீச்சு ஆள் ரவுண்டர் தனுஷ் கோட்டியன் 509 ரன்கள் மற்றும் 29 விக்கெட்டுகள் கைப்பற்றி தொடர் நாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

இந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணிக்கு பிசிசிஐ 5 கோடி ரூபாய் பரிசு தொகையும், இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த விதர்பா அணிக்கு மூன்று கோடி ரூபாய் பரிசு தொகையும் அறிவித்துக் கொடுத்திருக்கிறது. மேலும் வெற்றி பெற்ற மும்பை அணிக்கு மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் மேலும் 5 கோடி ரூபாய் பரிசுத் தொகையை அறிவித்து அசத்தியிருக்கிறது.

இதையும் படிங்க : ரோகித் இல்லனா 2015 ஐபிஎல்-லயே பும்ரா கிடையாது.. என்ன நடந்துச்சு தெரியுமா? – பார்த்திவ் படேல் பேட்டி

கூடுதல் பரிசுத்தொகை அறிவிப்பு குறித்து பேசி உள்ள மும்பை கிரிக்கெட் அசோசியேசன் செயலாளர் அஜிங்க்யா நாயக் கூறும் பொழுது “மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் அமுல் காலே மற்றும் அபெக்ஸ் குழு ரஞ்சி டிராபி பரிசுத் தொகையை இரட்டிப்பாக மாற்ற முடிவு செய்துள்ளனர். இதன் அடிப்படையில் மும்பை அணிக்கு கூடுதலாக 5 கோடி கிடைக்கும். மேலும் இந்த ஆண்டில் மும்பை அணி 7 பட்டங்களையும், எல்லா வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிசிசிஐயின் எல்லா தொடர்களிலும் மும்பை அணி நாக் அவுட் சுற்றை எட்டி இருக்கிறது. இது எங்களுக்கு சிறந்த ஆண்டாக அமைந்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.