இந்திய அணி 17 ஆண்டுகளுக்குப் பிறகு ரோகித் சர்மா தலைமையில் டி20 உலகக்கோப்பை தொடரைக் கைப்பற்றியது. மேலும் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்கு ஒரு உலகக்கோப்பை கிடைத்தது. இந்த நிலையில் உலகக்கோப்பை டிராபிக்கு ரோகித் சர்மா செய்த ஒரு செயல் ரசிகர்களை உருக வைத்திருக்கிறது.
இந்தியாவில் கிரிக்கெட் ஒரு தனி மதம் என்று எப்பொழுதும் உலகக் கிரிக்கெட்டில் இருக்கும் எல்லோரும் கூறுவார்கள். அந்த அளவிற்கு தீவிரமான கிரிக்கெட் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் இருக்கிறார்கள். இங்கு கிரிக்கெட் மதம் என்னும் பொழுது தனிப்பட்ட வீரர் யாரையாவது கடவுள் ஆக்குவார்கள். அந்த அளவுக்கு கிரிக்கெட் மோகம் இந்தியாவில் அதிகம்.
மேலும் இந்திய கிரிக்கெட்டில் வருமானம் உலகக் கிரிக்கெட்டின் வருமானத்தை விட அதிகம். இவ்வளவு விஷயங்கள் கிரிக்கெட் தொடர்பாக இந்தியாவில் தீவிரமாக இருந்த பொழுதிலும் இந்தியாவிற்கு உலகக்கோப்பை என்பது எப்பொழுதும் இழுபறியாகவே இருந்து வந்திருக்கிறது. இது உலக அரங்கில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டும் இல்லாமல் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெரிய மன உளைச்சலை கொடுத்து வந்தது.
இந்த நிலையில் ரோகித் சர்மா தலைமையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றும் என எல்லோரும் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் அத்தனை எதிர்பார்ப்புகளையும் சுக்குநூறாக உடைத்து ஆஸ்திரேலியா அணி இறுதிப் போட்டியில் வென்று சாம்பியன் ஆனது. இந்தியாவில் பல கோடி இதயங்கள் உடைந்து போன நிகழ்வு அது.
தனிப்பட்ட முறையில் கேப்டன் ரோகித் சர்மாவை கடந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தோல்வி வெகுவாக பாதித்திருந்தது. இந்த நிலையில் தற்போது டி20 உலக கோப்பை தொடரை வென்று இருப்பது அவருக்கு மிகப்பெரிய நிம்மதியை உருவாக்கி இருக்கிறது. இதனால் அவர் உலகக் கோப்பையை பாதுகாக்கும் விதம் ஒரு குழந்தையை பாதுகாப்பது போல இருக்கிறது.
இதையும் படிங்க : ரோகித் கிடையாது.. இந்திய அணியை கட்டுப்படுத்தும் கன்ட்ரோல் ரூம் இந்த வீரர்தான் – இர்பான் பதான் பேட்டி
இன்று வெற்றி பேரணிக்கு கிளம்புவதற்கு முன்பாக உலகக்கோப்பையை வைத்து ஒரு துணியால் துடைத்து அவரே சுத்தம் செய்யும் வீடியோ வெளியாகியது. அந்த அளவிற்கு கண்ணும் கருத்துமாக அவர் உலகக் கோப்பையை பாதுகாத்து வருகிறார். இந்த அளவிற்கு ரோகித் சர்மா இருக்கின்ற காரணத்தினால், அவர் இதற்காக எவ்வளவு தூரம் கடுமையாக உழைத்து இருப்பார்? எவ்வளவு ஏக்கத்தோடு காத்திருந்திருப்பார்? இன்று கிரிக்கெட் ரசிகர்கள் நெகிழ்ந்து இருக்கிறார்கள். மேலும் இந்தியாவிற்கு எதிராக இறுதி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று அதன் மீது ஆஸ்திரேலியா வீரர் மிட்சல் மார்ஸ் கால் வைத்ததற்கு, தற்போது ரோகித் சர்மா உலகக் கோப்பையை பாதுகாக்கும் விதத்தின் மூலமாக பதிலடி தந்திருக்கிறார் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பேசி வருகிறார்கள். மேலும் இந்த வீடியோவும் தற்பொழுது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
CAPTAIN ROHIT SHARMA WAS CLEANING THE WORLD CUP TROPHY 🥹.
— Vishal. (@SPORTYVISHAL) July 4, 2024
THIS IS SACRED FOR HITMAN 🐐🏆.pic.twitter.com/G8NTKJNKf0






