“அடுத்த டெஸ்ட்ல இது நடக்கும்.. இதுவரை செஞ்சதிலேயே பெருசா செய்ய போறோம்” – மெக்கலம் அதிரடி

0
134
McCullam

ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணியில் மொத்தம் நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளார்கள்.

இந்த நான்கு பேரில் லீச் மற்றும் அனுபவம் உள்ளவர். இடது கை சுழற் பந்துவீச்சாளர் டாம் ஹார்ட்லி, லெக் ஸ்பின் ரேகான் அகமத் மற்றும் ஆப் ஸ்பின்னர் சோயப் பஷீர் ஆகியோர் மிகவும் அனுபவம் குறைவானவர்கள்.

- Advertisement -

இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் பூர்வீகத்தை கொண்ட சோயப் பஷீர் விசா தாமதமானது. இதன் காரணமாக அவர் ஹைதராபாத் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியவில்லை.

ஆனால் போட்டியின் இறுதி நாளான நான்காவது நாள் அவர் மைதானத்திற்கு வந்துவிட்டார். இங்கிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்துவதை அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். அவர் விளையாட விட்டாலும் அவருக்கு அது ஒரு புதிய அனுபவமாக இருந்திருக்கும்.

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் அதிரடி பயிற்சியாளர் மெக்கலம் தங்களது நான்கு சுழற் பந்துவீச்சாளர்களையும் ஒரே ஆட்டத்தில் கூட விளையாட வைப்போம் எனக் கூறி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் பொழுது “அபுதாபியில் எங்கள் பயிற்சி முகாமில் பஷீர் இருந்தார். அவர் எங்களது திட்டத்திற்கு மிகவும் சரியானவராக தெரிந்தார் மேலும் உற்சாகமான இளைஞராக இருந்தார். இந்தியாவில் அவருடைய திறமைகள் எங்களுக்கு உதவ கூடும் என்று நாங்கள் நம்பினோம்.

இந்த நிலையில் அவருக்கு விசா பிரச்சனை ஏற்பட்டது. இப்படி சில நேரங்களில் நடக்கக்கூடியதுதான். அவர் அணிவுடன் இணைந்ததும் அவருக்கு கைதட்டல்கள் கிடைத்தது. அவர் மைதானத்தில் அமர்ந்து எங்கள் சுழல் பந்து வீச்சாளர்கள் பந்து வீசுவதையும் அருமையான வெற்றியையும் பார்த்தார்.

இதையும் படிங்க : “விராட் கோலி மத்தவங்க நினைக்கிற மாதிரி கிடையாது.. வேற லெவல்” – ஸ்டார்க் ஓபன் ஸ்பீச்

அடுத்த டெஸ்ட் போட்டிக்கான திட்டத்திலும் அவர் இருக்கிறார். மேலும் அடுத்த அடுத்த போட்டிகளில் அவர் தேவைப்படும் பொழுது, நாங்கள் எங்களுடைய சுழற் பந்துவீச்சாளர்களோடு சேர்த்து அவரையும் களம் இறக்க தயங்க மாட்டோம்” என்று கூறியிருக்கிறார்.