“துருவ் ஜுரல்கிட்ட இதைத்தான் சொன்னேன்.. என்னுடைய தனித்திட்டம் இதுதான்” – சுப்மன் கில் பேட்டி

0
640
Gill

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியை வென்றதோடு, இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் இப்பொழுது வென்று இருக்கிறது.

நடைபெற்று முடிந்திருக்கும் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது.

- Advertisement -

192 ரன்களை இலக்காக கொண்டு களம் இறங்கிய இந்திய அணி 120 ரன்கள் எடுத்த போது ஐந்து விக்கெட்டுகளை இழந்து விட்டது.

இங்கிருந்து ஜோடி சேர்ந்த சுப்மன் கில் மற்றும் துருவ் ஜுரல் இருவரும் இணைந்து மேற்கொண்டு விக்கெட்டுகள் விடாமல் 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்கள்.

சுப்மன் கில் மிகவும் பொறுமையுடன் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் இருந்து, வெற்றி உறுதி என்ற நிலையில் இரண்டு சிக்ஸர்கள் அடித்து ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். கில் 52 ரன்கள் எடுக்க, அவருடன் இணைந்து விளையாடிய துருவ் ஜுரல் ஆட்டம் இழக்காமல் 39 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

வெற்றிக்குப் பின் பேசிய சுப்மன் கில் “இங்கிலாந்து அணி எங்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கியது. ஆனாலும் கூட எங்களின் தொடக்க ஆட்டக்காரர்களால் நாங்கள் நல்ல தொடக்கத்தை பெற்றோம். திடீரென இரண்டு விக்கெட்டுகளை அடுத்தடுத்து இலந்ததால் ஆட்டத்தில் அழுத்தம் எங்கள் மீது வந்தது. ஆனால் துருவ் ஜுரல் வந்து ஆட்டத்தில் இருந்த அழுத்தத்தை எடுத்தார்.

இங்கிலாந்து அணியினர் பவுண்டரி தராமல் இருப்பதற்கான பீல்டிங் செட்டப்பை வைத்தார்கள். எனவே நான் அவர்களுக்கு மெய்டன்கள் தரக்கூடாது, சிங்கிள்ஸ் எடுத்து ரொட்டேட் செய்ய வேண்டும் என முடிவு செய்தேன்.

மேலும் ஜுரல் வந்த பொழுது அவரிடம் ‘கடந்த போட்டியில் நீங்கள் நன்றாக விளையாடினார்கள். அதே மனநிலையில் விளையாடுங்கள்’ என்று மட்டும் கூறினேன்.

முதல் போட்டியில் பந்து அதிகம் சுழலாத காரணத்தினால் நான் இறங்கி வந்து விளையாடவில்லை. ஆனாலும் நான் எல்பிடபிள்யூ ஆகினேன். இந்த முறை எல்பிடபிள்யுவை வெளியில் எடுப்பதற்கு, ஆப் ஸ்பின்னருக்கு எதிராக இறங்கி வந்து விளையாடினேன்.

இதையும் படிங்க : 2013 to 2024.. 17வது முறை.. இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி சாதனை வெற்றி.. தொடரைக கைப்பற்றியது

அணியின் சீனியர் பேட்ஸ்மேன் கேஎல் ராகுல் கிடைக்காமல் போனதும் எங்களுடைய பேட்டிங் யூனிட் அனுபவம் இல்லாததாக மாறியது. ஆனாலும் ரோகித் பாய் எங்களை நம்பி முழு சுதந்திரம் கொடுத்து எங்களை விளையாட வைத்தார்” எனக் கூறியிருக்கிறார்.