யாரையோ சந்தோசப்படுத்த.. ரிங்கு சிங்கை பலிகடா ஆக்கிட்டாங்க.. இது குப்பையான தேர்வு – ஸ்ரீகாந்த் விமர்சனம்

0
5401
Rinku

2024 ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் என இரு நாடுகளில் நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கு நேற்று 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் பலரும் எதிர்பார்த்த ரிங்கு சிங்கை தேர்வு செய்யாதது அதிர்ச்சியாக அமைந்தது. இதுகுறித்து தனது கடும் விமர்சனத்தை இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் வைத்திருக்கிறார்.

நேற்று அறிவிக்கப்பட்ட டி20 உலக கோப்பை இந்திய அணியில் கடந்த சில சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக ஃபினிஷிங் இடத்தில் ரிங்கு சிங் அபாரமான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தார். இதன் காரணமாக பல முன்னால் வீரர்கள் தங்களுடைய விமர்சனத்தை முன்வைத்து வருகிறார்கள்.

- Advertisement -

இதுவரையில் ரிங்கு சிங் இந்திய அணிக்காக 15 டி20 போட்டிகளில் விளையாடி 89 ஆவரேஜில் 359 ரன்கள் அடித்திருக்கிறார். மேலும் இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 176 என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் கடினமான பினிஷிங் இடத்தில் இப்படியான ஒரு புள்ளிவிபரத்தை கொண்டிருப்பது ஆச்சரியமான ஒன்று. ஆனாலும் அவருக்கு அணியில் இடம் இல்லாதது அதைவிட ஆச்சரியமாக அமைந்திருக்கிறது.

தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் ஸ்ரீகாந்த் கூறும் பொழுது “இந்த முடிவில் நான் மகிழ்ச்சியாக இல்லை. உலகம் முழுவதும் ரிங்கு சிங் பேசப்படக் கூடியவராக இருக்கிறார். அவர் தனக்கு கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நிரூபித்திருக்கிறார். இப்படி இருக்கும் பொழுது ரிங்கு சிங்கை எப்படி கைவிட முடியும்? நீங்கள் வேறு யாரையாவது கைவிடலாம். ஜெய்ஸ்வாலை அணியில் சேர்க்காமல் கூட ரிங்கு சிங்கை சேர்க்கலாம்.

ரிங்கு சிங் தென் ஆப்ரிக்காவில் மேட்ச் வின்னிங் நாக் விளையாடினார். ரோகித் சர்மா ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்த போட்டியில், இந்தியா 22 ரன்னுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தது. அப்பொழுது ரோகித் சர்மாவுடன் இணைந்து ரிங்கு சிங் விளையாடிய ஆட்டத்தை மறக்க முடியுமா? அவரால் எப்போது வேண்டுமானாலும் அணிக்கு தேவையான அனைத்தையும் கொடுக்க முடியும். இந்த அணியில் நான்கு ஸ்பின்னர்கள் எதற்கு? யாரையும் சந்தோஷப்படுத்த ரிங்க்டோசிங் பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறார். இது மிகக் குப்பையான ஒரு தேர்வு” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்தியா செலக்ட் பண்ணாத பிளேயர்கள் போனாலே.. டி20 உலக கோப்பையை ஜெயிப்பாங்க – கவாஸ்கர் பேட்டி

மேலும் டி20 உலகக்கோப்பை இந்திய அணி தேர்வு செய்யப்படுவதற்கு முன்பாகவே ஸ்ரீகாந்த் ரிங்கு சிங்கை கட்டாயம் அணியில் தேர்வு செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தார். அவருடைய ஐபிஎல் பார்ம் எப்படி இருந்தாலும், அவருடைய சர்வதேச டி20 கிரிக்கெட் பார்மைதான் பார்க்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில் ரிங்கு சிங்கை தேர்வு செய்யாதது அவரை மிகவும் கடுமையாகக் கோபப்படுத்தி இருப்பது தெரிகிறது