இந்தியா செலக்ட் பண்ணாத பிளேயர்கள் போனாலே.. டி20 உலக கோப்பையை ஜெயிப்பாங்க – கவாஸ்கர் பேட்டி

0
198
Gavaskar

இந்த ஆண்டு அடுத்த மாதம் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கு 15 பேர் கொண்ட இந்திய அணி வெளியிடப்பட்டது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனான இளம் வீரர் சுப்மன் கில் ரிசர்வ் வீரராக மட்டுமே சேர்க்கப்பட்டிருக்கிறார். இது குறித்து கவாஸ்கர் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

நேற்று அறிவிக்கப்பட்ட டி20 உலக கோப்பை இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் இடம் பெற்று இருக்கிறார்கள். அதே சமயத்தில் மூன்றாவது துவக்க ஆட்டக்காரராக எந்த வீரரையும் தேர்வு செய்யவில்லை. மாறாக அறிவிக்கப்பட்ட அணியில் உள்ள விராட் கோலி மற்றும் சஞ்சு சாம்சன் யாராவது அந்த இடத்தில் தேவைப்பட்டால் விளையாட முடியும்.

- Advertisement -

இதன் காரணமாக சுப்மன் கில் மற்றும் ருதுராஜ் இருவருமே டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் பெறவில்லை. எதிர்கால இந்திய கிரிக்கெட்டின் வீரராக பார்க்கப்படக்கூடிய கில்லுக்கு அணியில் இடம் கிடைக்காதது ஒருபுறம் விமர்சனங்களை உருவாக்குகிறது. அதே சமயத்தில் இன்னொரு பக்கம் பிசிசிஐ தைரியமாக செயல்பட்டதாகவும் பாராட்டுகிறார்கள்.

மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பேட்டிங் செயல்பாடு ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும் போகப் போக மிகவும் சுமாராக இருந்து வருகிறது. அவரை வெளியில் வைப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “கில் போன்ற ஒருவரை வெளியே வைக்கும் அளவுக்கு இந்திய பெஞ்ச் வலிமை இருக்கிறது. இதுதான் இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த பாக்கியம். தற்போது தேர்வு செய்யப்படாத வீரர்களை வைத்து இரண்டாவது அணியை உருவாக்கினால், அந்த அணி கூட டி20 உலக கோப்பையை வெல்லும் திறமையுடன் இருக்கும். இப்படி இருக்கும் பொழுது சில சமயங்களில் நீங்கள் திறமையான சில வீரர்களை தவறவிட வேண்டியது வரும்.

- Advertisement -

இதையும் படிங்க : நடராஜன் பவுலிங் ஃபார்மையே இவங்க பாக்கல.. ஃபார்ம் இல்லாதவங்களை செலக்ட் பண்ணிட்டாங்க – ஆகாஷ் சோப்ரா பேச்சு

கடந்த சில ஐபிஎல் போட்டிகளில் கில் பேட்டிங் ஃபார்ம் மோசமாக இருந்தது. அவர் ஐபிஎல் தொடரை நல்ல விதமாக ஆரம்பித்தார். பின்பு தொடர்ந்து அவர் ரன்கள் எடுக்க தவறினார். அவர் ரன்கள் எடுக்கும் பொழுது அந்த அணி வெற்றி பெற்றது. அவர் சரியாக விளையாடாத பொழுது அந்த அணி தோற்று வருகிறது” என்று கூறியிருக்கிறார்