நடராஜன் பவுலிங் ஃபார்மையே இவங்க பாக்கல.. ஃபார்ம் இல்லாதவங்களை செலக்ட் பண்ணிட்டாங்க – ஆகாஷ் சோப்ரா பேச்சு

0
5482
Natarajan

நேற்று டி20 உலக கோப்பைக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில், தற்போது சிறந்த பவுலிங் ஃபார்மில் இருக்கும் தமிழகத்தின் டி.நடராஜனை சேர்க்கவில்லை. இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா காரணங்களை பேசியிருக்கிறார்.

டி20 உலக கோப்பைக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ரா, சிராஜ் மற்றும் அர்ஸ்தீப் சிங் மூவரும் இடம் பெற்று இருக்கிறார்கள். இதில் பும்ரா தவிர மற்ற இருவரின் பவுலிங் பார்மும் சரியாக இல்லை. இருந்தும் கூட டி.நடராஜன் சிறப்பாக செயல்படும் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.

- Advertisement -

இதுகுறித்து பேசி இருக்கும் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணியில் மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். தேர்வாளர்கள் சமீபத்தில் யார் சிறந்த பார்மில் இருக்கிறார்கள் என்பதை புறக்கணித்திருக்கிறார்கள். அப்படி அவர்கள் பார்ப்பதாக இருந்திருந்தால் நடராஜனை அணியில் சேர்த்து இருப்பார்கள்.

தேர்வாளர்கள் நடராஜனை நோக்கி சென்று இருக்கலாம் ஆனால் மறுத்திருக்கிறார்கள். ஏனென்றால் சிராஜ் மற்றும் அர்ஸ்தீப் இருவருடைய தற்போதைய பவுலிங் பார்ம் சிறப்பாக இல்லை என்றாலும் கூட, அவர்கள் இதற்கு முன்பாக இந்திய அணிக்கு சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். எனவே அதற்கு தான் இங்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாகத்தான் நடராஜனை சேர்க்கவில்லை.

இரண்டு இடது கை சுழல் பந்துவீச்சாளர்கள் ஜடேஜா மற்றும் அக்சர் இருவரையும் அணியில் சேர்த்திருக்கிறார்கள். மேலும் குல்தீப் யாதவ் மற்றும் சாகல் இருவரையும் தேர்வு செய்திருக்கிறார்கள். இதன் காரணமாக ஒரு வேகப்பந்துவீச்சாளரை குறைவாகக் கூட்டி செல்ல இருக்கிறார்கள். வெஸ்ட் இண்டிஸ் சூழ்நிலைக்கு அவர்களுடைய இந்த முடிவு மிகச் சரியானதுதான். சரியான சுழல் பந்துவீச்சாளர்களை எடுப்பதன் மூலம் சிறப்பாக செயல்படலாம்.

- Advertisement -

இதையும் படிங்க : அடுத்த பும்ரா ரெடி.. ஆர்சிபி கேம்பில் கலக்கும் மகேஷ் குமார்.. வீடியோவால் ரசிகர்கள் ஆச்சரியம்

எப்படி இருந்தாலும் சாகலுக்கு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்டுகளையும், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்களையும் கைப்பற்றிய பந்துவீச்சாளராக இருக்கிறார். ஆனால் இதுவரையில் அவருக்கு டி20 உலகக்கோப்பையில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இந்த முறை அவர் விளையாடுவார் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.