2013 to 2024.. 17வது முறை.. இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி சாதனை வெற்றி.. தொடரைக கைப்பற்றியது

0
632
Gill

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒட்டுமொத்தமாக இளம் வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். நான்காவது டெஸ்ட் போட்டியிலும் அது தொடர்ந்து இருக்கிறது.

இந்த போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 353 ரன்கள் எடுக்க இந்திய அணி 307 ரன்கள் எடுத்து 46 ரன்கள் பின் தங்கியது.முதல் இன்னிங்ஸ் முடிவில் இங்கிலாந்து அணி இந்த போட்டியில் முன்னிலையில் இருந்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து இங்கிலாந்து அணியை இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 145 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. இந்திய சுழற் பந்துவீச்சாளர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் 5, குல்தீப் யாதவ் 4 விக்கெட் கைப்பற்றினார்கள்.

இந்திய அணி 192 ரன்கள் என்கின்ற இலக்கை நோக்கி நேற்று மூன்றாம் நாள் முடிவில் விக்கெட் இழப்பில்லாமல் 40 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கின்ற சூழ்நிலையில் இந்திய அணி களம் இறங்கி விளையாடியது.

- Advertisement -

நேற்றிலிருந்து மேற்கொண்டு 44 ரன்கள் எடுத்து 84 ரன்னில் ஜெய்ஸ்வால் 37 ரன் எடுத்திருக்கும் பொழுது ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து ரோகித் சர்மா 55, ரஜத் பட்டிதார் 0, ரவீந்திர ஜடேஜா 4, சர்பராஸ் கான் 0 ரன் என அடுத்தடுத்து வெளியேறினார்கள்.

இந்திய அணி 84 ரன்னில் இருந்து 120 ரன்களுக்குள், வெறும் 36 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட்டை இழந்து நெருக்கடியான நிலைமைக்குள் சென்றது. திடீரென போட்டியில் இங்கிலாந்து அணியின் ஆதிக்கம் தலைத் தூக்கியது.

இந்த நிலையில் மூன்றாவது களம் இறங்கிய சுப்மன் கில் உடன் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் சிறப்பாக செயல்பட்ட துருவ் ஜுரல் ஜோடி சேர்ந்தார். இந்தஜோடி மிகவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மேலும் ஒன்று இரண்டு ரன்கள் என ஓடி ஓடி சேர்த்தது.

சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி அரைசதம் பார்ட்னர்ஷிப் அமைத்து, இந்தியா இனிமேல் இருந்த அழுத்தத்தை ஒட்டுமொத்தமாக போட்டியிலிருந்து எடுத்தது. இறுதியாக 61 ஓவரில் இந்திய அணி இலக்கை எட்டி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆறாவது விக்கெட்டுக்கு 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் சுப்மன் கில் 52, துருவ் ஜுரல் 39 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார்கள். ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளை இப்பொழுதே வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றி இருக்கிறது.

இதையும் படிங்க : எந்த வீரரும் செய்யாத விராட் கோலி சாதனை.. ஜெய்ஸ்வால் சமன்.. அடுத்த போட்டியில் உடனே உடையும்

2013ஆம் ஆண்டு முதல் தற்பொழுது 2024ஆம் ஆண்டு வரை மொத்தம் 11 ஆண்டுகளாக 17 டெஸ்ட் சீரியஸை உள்நாட்டில் இந்திய அணி வென்று அசத்தியிருக்கிறது. உள்நாட்டில் இந்திய அணியின் ஆதிக்கம் மேலும் தொடர்கிறது.

- Advertisement -