“ஜடேஜாவுக்கு இது அலாரம்.. அக்சர்தான் சிறப்பா இருக்கிறார்” – மீண்டும் சீண்டும் மஞ்ச்ரேக்கர்

0
90
Jadeja

நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிராக துவங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய சுழற் பந்துவீச்சாளர்களின் செயல்பாடு சற்று சுமாராக இருந்ததாக தொடர்ந்து விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

தினேஷ் கார்த்திக் இது குறித்து தன்னுடைய விமர்சனத்தை முன் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பான முறையில் வீசி இருந்தாலும், அக்சர் படேல் பந்தே சிறந்தது என கூறுகிறார்கள்.

- Advertisement -

நேற்றைய பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா 18 ஓவர்களுக்கு 88 ரன்கள் கொடுத்திருந்தார். கிட்டத்தட்ட இது ஓவருக்கு ஐந்து ரன்கள் வீதம் வழங்கப்பட்டதாகும். பொதுவாக உள்நாட்டில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் ரவீந்திர ஜடேஜா இவ்வளவு வீதத்தில் ரன்கள் தர மாட்டார்.

ரவீந்திர ஜடேஜாவை எப்பொழுதும் சீண்டி வரும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், இந்த ஒரு போட்டியை வைத்து மீண்டும் ரவீந்திர ஜடேஜாவுக்கு மிகப்பெரிய அறிவுரைகளை கொண்டு வந்திருக்கிறார்.

ஜடேஜா பந்துவீச்சு குறித்து மஞ்ச்ரேக்கர் பேசும் பொழுது “நிச்சயமாக ரவீந்திர ஜடேஜா சோதிக்கப்பட்டார். அவர் இதற்கு தகுந்த முறையில் தயாராகி சிறந்த திட்டங்களை கொண்டு வருவார் என்று நான் நம்புகிறேன். ஜடேஜாவின் பெரிய பலன்களில் ஒன்று துல்லியம். அவருடைய பவுலிங் பிட்ச் மேப்பை எடுத்து வைத்துப் பார்த்தால், பெரும்பாலான பந்துகள் ஒரே இடத்தில் தரை இறங்கி இருக்கும். ஆனால் நேற்று அப்படி இல்லை.

- Advertisement -

இது ஜடேஜாவுக்கு ஒரு எச்சரிக்கை. ஆனால் அவர் போட்டியாளரைக் கருத்தில் கொண்டு, அவர் இந்த மாதிரியான விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பார் என்று நம்புகிறேன்.

இதையும் படிங்க : U19 உலகக்கோப்பை தம்பி சதம்.. இங்கிலாந்து லயன்ஸ் அண்ணன் சதம்.. ஒரே ஸ்டைல்தான் தம்பி பேட்டி!

இந்தியாவுக்கு ஸ்பின்னர்களில் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் அக்சர் படேல் சிறப்பானவராக இருந்தார். கடந்த முறை ஜடேஜா மற்றும் அக்சர் இருவரும் இணைந்து விளையாடிய பொழுது, அக்சர் சரியான முறையில் இல்லை. ஆனால் இந்த முறை அவர் ஜடேஜாவை விட சிறப்பாகப் பந்து வீசினார்.கடந்த சில வருடங்களில் நாம் பார்த்த வறண்ட சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான அதே இந்திய ஆடுகளம்தான் இதுவும். இப்படியான ஆடுகளத்திற்கு இங்கிலாந்து ஆச்சரியப்படாது. ஏனென்றால் அவர்கள் ஏற்கனவே இம்மாதிரியான ஆடுகளத்தில் இங்கு விளையாடி இருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.