இந்திய கிரிக்கெட்டில் சகோதரர்கள் சேர்ந்து விளையாடியது இர்பான் பதான் மற்றும் யூசுப் பதான் இருவரும் விளையாடிய பொழுது நடந்தது. உலக கிரிக்கெட்டில் நிறைய பிரபலமான வீரர்கள் சகோதரர்களாக இருந்து விளையாடி இருக்கிறார்கள்.
இந்த வகையில் தற்பொழுது மும்பையில் இருந்து சர்ப்ராஸ் கான் மற்றும் அவரது தம்பி முசீர் கான் இருவரும் அமைந்திருக்கிறார்கள். இருவருமே ஒரே மாதிரி அட்டாக்கிங் பேட்டிங் ஸ்டைல் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
சர்பராஸ் கான் வலது கை பேட்ஸ்மேன் மற்றும் பகுதிநேர விக்கெட் கீப்பிங் செய்யக்கூடியவர். இவரது தம்பி முசீர் கான் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்யக் கூடியவர் மற்றும் சுழற்பந்து வீசக்கூடியவர்.
நேற்று ஒரே நாளில் அண்ணன் தம்பி இருவரும் இந்தியாவுக்காக இரண்டு தொடர்களில் சதம் அடித்து அசத்தியிருக்கிறார்கள். நேற்றைய நாள் அவர்களுக்கானதாக அமைந்திருக்கிறது.
அண்ணன் சர்பராஸ் கான் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக அதிரடியாக 160 பந்துகளில் 161 ரன் குவித்திருக்கிறார். இது நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
தம்பி முசீர் கான் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 106 பந்துகளில் 118 ரன்கள் குவித்து அசத்தியிருக்கிறார்.
இந்திய டெஸ்ட் அணியின் கதவுகளை அண்ணன் வேகமாகத் தட்டிக் கொண்டிருக்க, எதிர்காலத்தில் இந்திய அணிக்காக மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடக்கூடிய வீரராக முசீர் கான் தெரிகிறார்.
இதையும் படிங்க : “உண்மைய சொல்றேன்.. 3 பேருமே சரியா பவுலிங் பண்ணல” – தினேஷ் கார்த்திக் பரபரப்பு பேச்சு
நேற்றைய போட்டி முடிவடைந்ததும் தம்பி முசீர் கான் பேசும்பொழுது “நாங்கள் இருவரும் விளையாடும் ஸ்டைல் ஒரே மாதிரியானது. நான் இந்த போட்டியில் மிட் விக்கெட் திசையில் அடித்த சிக்சர் சிறந்தது. நான் என்னுடைய பேட்டிங்கில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் வரவிருக்கும் போட்டிகளிலும் என்னால் சிறப்பாக விளையாட முடியும் என நம்புகிறேன்” எனக் கூறியிருக்கிறார்.