140 கிமீ-க்கு கீழ் குறைந்த வேகம்.. ஒரே ஓவரில் வெளியேறிய மயங்க் யாதவ்.. காரணம் என்ன?.. முழு தகவல்

0
1431
Mayank

நேற்று ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், லக்னோ அணியின் அதிவேக பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் ஒரு ஓவர் பந்து வீசிய நிலையில் களத்தை விட்டு வெளியேறினார். தற்போது இந்த சம்பவம் பல கேள்விகளை உருவாக்கி இருக்கிறது.

இன்று இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணிக்கு மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 43 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களில் லக்னோ அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் சேர்த்தது. குஜராத் அணியின் தரப்பில் உமேஷ் யாதவ் மற்றும் நல்கண்டே இருவரும் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி விக்கெட் இழப்பில்லாமல் 54 ரன்கள் எடுத்து, அங்கிருந்து மேற்கொண்டு 76 ரன்கள் எடுப்பதற்கு 10 விக்கட்டுகளையும் இழந்து, 130 ரன்களில் சுருண்டு, 33 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியிடம் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் லக்னோ அணியின் யாஸ் தாக்கூர் ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

மேலும் இந்த போட்டியில் லக்னோ அணியின் அதிவேக பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் நான்காவது ஓவர் பந்து வீச வந்தார். அந்த ஓவரின் அதிகபட்சமாக அவர் 143 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினார். ஒரு பந்து கூட 150 கிலோமீட்டர் வேகத்திற்கு செல்லவில்லை. பாதிக்கு பாதி பந்துகள் 130 கிலோமீட்டருக்கு மேல் இருந்தது. அவர் தன்னுடைய சரியான ரிதத்தில் இல்லை என்பது தெளிவாக தெரிந்தது.

மேலும் அந்த ஒரு ஓவரில் மட்டும் மூன்று பவுண்டரிகள் கொடுத்தார். அந்த ஓவரில் 13 ரன்கள் வர, ஒரே ஒரு ஓவரை வீசி முடித்த கையுடன் மயங்க் யாதவ் களத்தை விட்டு பிசியோ உடன் வெளியே சென்று விட்டார். இது லக்னோ அணிக்கு பெரிய பின்னடைவாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், அந்த அணி எல்லாவற்றையும் தாண்டி வெற்றி பெற்று இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : குஜராத் 76 ரன்களுக்கு 10 விக்கெட்.. ஐபிஎல் வரலாற்றில் லக்னோவுக்கு ஸ்பெஷல் வெற்றி.. சிஎஸ்கே புள்ளி பட்டியலில் பின்னடைவு

அதே சமயத்தில் மயங்கி யாதவுக்கு சைடு ட்ரெயின் காயம் ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அவருடன் உரையாடிய பொழுது அவர் நன்றாக இருப்பதாக குர்னால் பாண்டியா தெரிவித்து இருக்கிறார். ஆனால் அடுத்த போட்டியில் விளையாடுவாரா? என்பது குறித்து இன்னும் முழுமையான தகவல்கள் ஏதும் வரவில்லை.