குஜராத் 76 ரன்களுக்கு 10 விக்கெட்.. ஐபிஎல் வரலாற்றில் லக்னோவுக்கு ஸ்பெஷல் வெற்றி.. சிஎஸ்கே புள்ளி பட்டியலில் பின்னடைவு

0
386
LSG

இன்று ஐபிஎல் தொடரில் நடைபெறும் இரண்டு போட்டிகளில், இரண்டாவது போட்டியில் லக்னோ ஏகனோ மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜீன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் யாஸ் தாகூர் அபார பந்துவீச்சில் லக்னோ அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வென்றது.

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற லக்னோ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் குயின்டன் டி காக் 6 (4) ரன்னில் வெளியேறினார். இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் கேஎல்.ராகுல் மற்றும் ஸ்டாய்னிஸ் ஜோடி 62 பந்துகளில் 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. கேஎல்.ராகுல் 31 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் அரைசதம் அடித்து 43 பந்தில் 58 ரன்கள் உடன் வெளியேறினார். அடுத்து ஆயுஸ் பதோனி 11 பந்தில் 20 ரன்கள் எடுத்து வெளியேற, கடைசி கட்டத்தில் நிக்கோலஸ் பூரன் 22 பந்தில் 32 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் உமேஷ் யாதவ் மற்றும் தர்ஷன் நல்கண்டே இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

இந்தப் இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணிக்கு துவக்கம் தருவதற்கு இந்த முறை சாய் சுதர்சன் மற்றும் கேப்டன் கில் இருவரும் வந்தார்கள். இந்த ஜோடி மிகச் சிறப்பாக விளையாடி 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. பவர் பிளேவின் கடைசி ஓவரின் கடைசிப் பந்தில் 21 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து கில் வெளியேறினார்.

இதற்கு அடுத்து குஜராத் அணி அப்படியே ஒட்டுமொத்தமாக சரிந்தது. அந்த அணியின் சாய் சுதர்சன் 31 (23), கேன் வில்லியம்சன் 1 (5), விக்கெட் கீப்பர் சரத் 2 (5), விஜய் சங்கர் 17 (17), தர்ஷன் நல்கண்டே 12 (11), ரஷீத் கான் 0 (3), உமேஷ் யாதவ் 2 (4), ராகுல் திவாட்டியா 30 (25), நூர் அகமத் 4 (2), ஸ்பென்சர் ஜான்சன் 0* (1) ரன்கள் எடுக்க, 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து குஜராத் அணி 130 ரன்கள் மட்டுமே எடுத்து, 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. லக்னோ வணிகின் தரப்பில் யாஸ் தாக்கூர் ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

இதையும் படிங்க : முகேஷ் சௌத்ரி தங்கம் மாதிரி.. பதிரனா நாளை கேகேஆர் அணிக்கு எதிராக விளையாடுவாரா? – சிஎஸ்கே பவுலிங் கோச் பேட்டி

ஐபிஎல் வரலாற்றில் குஜராத் அணிக்கு எதிராக லக்னோ அணி முதல் வெற்றியை பெற்றிருக்கிறது. 54 ரன்களுக்கு விக்கெட் இழப்பில்லாமல் இருந்த குஜராத் அணி மேற்கொண்டு 76 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகளையும் இழந்து இருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் லக்னோ புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. மூன்றாவது இடத்தில் இருந்த சிஎஸ்கே நான்காவது இடத்திற்கு வந்திருக்கிறது. குஜராத் அணி ஏழாவது இடத்தில் நீடிக்கிறது.