நடப்பு ஐபிஎல் தொடரில் மே 18ஆம் தேதி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழையும் நிலையில் இருக்கிறது. எனவே முக்கிய அதிகரித்துள்ள போட்டி குறித்து ஆர் சி பி அணியின் ஸ்வப்னில் சிங் பேசியிருக்கிறார்.
நடக்க இருக்கும் இந்த போட்டியில் ஆர்சிபி அணி 18 ரன்கள் அல்லது 11 பந்துகள் மீதம் வைத்து வெல்ல வேண்டும். சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால் போதும் பிளே ஆப் சுற்றுக்குள் நுழையலாம் என்கின்றநிலை இருந்து வருகிறது.
மேலும் நடக்க இருக்கும் போட்டி தோனிக்கு ஐபிஎல் கிரிக்கெட்டில் கடைசிப் போட்டியாக கூட இருக்கலாம். எனவே சிஎஸ்கே அணி வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றுக்குள் நுழைய வேண்டிய தேவைகள் பெரிய அளவில் இருக்கிறது. இந்தப் போட்டி பெரும்பாலும் தோனியைச் சுற்றியே இருக்கும்.
பொதுவாக தோனி களத்தில் இருப்பது எதிரணிகளுக்கு மனரீதியான பின்னடைவை கொடுக்க கூடியது. பேட்ஸ்மேன்கள் சில தவறுகளை தாமாக செய்வார்கள். சாதாரண கள வியூக மாற்றங்களை கூட குழப்பிக் கொள்வார்கள் என்பது பொதுவாக வெளியில் பேசப்படும் விஷயம்.
இந்த நிலையில் ஆர்சிபி அணியின் இளம் வீரர் ஸ்வப்னில் சிங் தோனி குறித்து கூறும்பொழுது “மகி பாய் நம் முன்னே இருப்பார். அப்பொழுது சில நினைவுகள் நமக்கு வரும். அவர் எப்படி எளிமையாக இருக்கிறார் விஷயங்களை எப்படி எளிமையாக வைத்துக் கொள்கிறார் என்று நினைப்போம். இதனால் அவர் இருக்கும் பொழுது உத்வேகம்தான் கிடைக்கும். அவருடைய போதனைகளை நான் தனிப்பட்ட முறையில் மனதில் வைத்துக் கொள்வேன். எனவே அழுத்தம் இருக்காது.
இதையும் படிங்க : டி20 உலக கோப்பை.. ரோகித் கோலி இத செய்வாங்கனு நம்பல.. அந்த பையன் வேணும் – ஆரோன் பின்ச் பேச்சு
நாங்கள் நடப்பு ஐபிஎல் தொடரில் ஏழு அல்லது எட்டாவது போட்டியில் இருந்தே நாக் அவுட் நிலையில்தான் விளையாடி வருகிறோம். எனவே தற்போது எங்களுக்கு இந்த சூழ்நிலை பெரிதாக தோன்றவில்லை. நிச்சயமாக ஒரு பெரிய போட்டி. குறிப்பிட்ட வித்தியாசத்தில் வென்றால் நாங்கள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம். ஆனால் இது குறித்து நாங்கள் சிந்திக்காமல், எங்களுடைய சொந்த விளையாட்டில் கவனம் செலுத்தி விளையாடுவோம். போட்டியில் வெற்றி பெற முயற்சி செய்வோம்” என்று கூறியிருக்கிறார்.






