கடைசியா பேரையே மாத்தப் போகும் ஆர்சிபி.. எப்படி தெரியுமா?.. அவர்களே சூசகமாக வெளியிட்ட வீடியோ

0
234
RCB

ஐபிஎல் தொடரில் இதுவரை நடைபெற்று இருக்கும் 16 சீசன்களில் மிக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய அணியாக பஞ்சாப் கிங்ஸ் அணி இருக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் இருக்கிறது. மூன்றாவது இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இருக்கிறது.

இந்த மூன்று அணிகள் தவிர்த்து நீண்ட காலமாக விளையாடு வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆகிய நான்கு அணிகளும் ஐபிஎல் கோப்பையை வென்ற அணிகளாக இருக்கின்றன.

- Advertisement -

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல் அணிகள் பெரிய அளவில் ஏலத்தில் சொதப்பிய காரணத்தினால் சரியான அணியை உருவாக்க முடியாமல் ஐபிஎல் தொடரில் மோசமான செயல்பாட்டை கொண்டு இருக்கிறார்கள் என்று கூறலாம். ஆனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கதையே வேறு. அவர்கள் அணியில் விளையாடாத நட்சத்திர வீரர்களே இல்லை என்று சொல்லலாம்.

உலகின் தலைசிறந்த வீரர்கள் அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு கிடைக்கும் துணை ஆட்டக்காரர்களை அந்த அணி தக்க வைத்தது கிடையாது. வருடம் முழுவதும் அணியின் வீரர்களை மாற்றிக் கொண்டே இருந்த காரணத்தினால், நட்சத்திர வீரர்கள் மட்டுமே எஞ்சி இருந்தார்கள். வளரும் வீரர்களை வெளியே விட்டு அவர்கள் வேறு அணிக்கு சென்று சாதிக்க ஆரம்பித்தார்கள். இதுவே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு வலிமையான ஒரு அணியை உருவாக்க முடியாததற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்படியான தவறுகளில் ஈடுபடக் கூடாது என முடிவு செய்து, ஓரளவிற்கு வளரும் வீரர்களை இறுக்கி பிடித்து அந்த அணி வைத்து வருகிறது. ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கடந்த மூன்று ஆண்டுகளிலும் சரியாக செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக 16 ஆண்டுகளில் ஒரு முறை கூட அந்த அணியால் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியவில்லை.

- Advertisement -

தற்பொழுது ஐபிஎல் தொடருக்கு முன்பாக அணியின் பெயரை மாற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பதாக தெரிகிறது. இதை சூசகமாக தெரிவிக்கும் வகையில், ஆர்சிபி அணியின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள்.

இதையும் படிங்க : “50 ரூபாய் கிடைக்கும்.. வேலை செஞ்சு கை புண்ணா இருக்கும்.. கிரிக்கெட்ட விட இருந்தேன்” – முகமது சிராஜ் பேச்சு

அந்த வீடியோவில் மொத்தம் மூன்று மாடுகள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்கின்ற 3 வார்த்தைகளை கொண்ட அங்கியை அணிந்தபடி நிற்கின்றன. இந்த வீடியோவில் வரும் திரைப்பட நடிகர் ரிஷாப் அந்த மூன்று மாடுகளில் பெங்களூரு என்கின்ற அங்கியை அணிந்திருக்கும் மாட்டை மட்டும் விரட்டி விடுகிறார். இதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் என்கின்ற பெயருக்கு பின்னால் பெங்களூரு என்பதை மட்டும் மாற்றி விட்டு, வேறு ஏதோ ஒன்றை சேர்க்க ஆர்சிபி அணி நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. இறுதியாக கோப்பையை வெல்வதற்கு பெயரை மாற்றும் அளவுக்கு இறங்கி இருக்கிறார்கள்!