“50 ரூபாய் கிடைக்கும்.. வேலை செஞ்சு கை புண்ணா இருக்கும்.. கிரிக்கெட்ட விட இருந்தேன்” – முகமது சிராஜ் பேச்சு

0
160
Siraj

இந்திய கிரிக்கெட்டில் மிகவும் வருமான பின்னணியில் இருந்து வந்து சாதித்தவர்களில், ஹைதராபாத்தில் இருந்து வந்த வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜிக்கு தனி இடம் இருக்கிறது. தந்தையின் இறப்புக்கு கூட செல்ல முடியாமல் ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்காக விளையாடிய அவரது தியாகம் எதற்கும் விலையில்லாத ஒன்று.

ஆரம்பத்தில் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக வாங்கப்பட்ட அவர் தன்னுடைய பந்துவீச்சின் காரணமாக மிக அளவுக்கு அதிகமாக சொந்த அணிகளின் ரசிகர்களால் கூட கேலி கிண்டலுக்கு உள்ளானார். அந்த இடத்திலேயே அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து கூட போய் இருக்கலாம். ஆனால் அவரது கிரிக்கெட் வாழ்க்கையை நீட்டிக்க செய்ததில் முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. அவரை அவர் தொடர்ந்து நம்பி வாய்ப்புகள் கொடுத்து, மேலும் இந்திய அணிக்கும் அவரை தேர்ந்தெடுத்து நிறைய உதவி செய்திருக்கிறார்.

- Advertisement -

அதே சமயத்தில் விராட் கோலி மூலம் ஒரு பக்கத்தில் உதவிகள் பெற்றாலும் கூட, எந்த இடத்திலும் மனச்சோர்வு அடையாமல் தொடர்ந்து தன் பந்துவீச்சை மேம்படுத்தி மேம்படுத்தி, இன்று இந்திய கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத வேகப்பந்துவீச்சாளராக மாறி இருக்கிறார். இந்திய வேகப்பந்து வீச்சு கூட்டணியில் பும்ரா, சமிக்கு அடுத்து இவரது பெயரைதான் தேர்வாளர்கள் எழுதுவார்கள். அந்த அளவிற்கு இந்திய கிரிக்கெட்டில் இவருடைய இடம் மிக வலிமையாக இருக்கிறது.

இன்று முகமது சிராஜ் தன்னுடைய 31வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். மிகவும் கடினமான சூழ்நிலைகளில் இருந்து வளர்ந்து வந்து, வாழ்க்கையில் வறுமைக்கு தன்னுடைய திறமையை பலி கொடுக்காமல் பார்த்துக் கொண்டு, கடுமையாக உழைத்து இந்த நிலையை எட்டி இருக்கும் முகமது சிராஜ், தான் கடந்து வந்த கடினமான பாதைகளை குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது ” நான் படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று என்னுடைய பெற்றோர்கள் விரும்பினார்கள். ஆனால் நான் கிரிக்கெட் விளையாட்டில் தான் அதிகம் கவனம் செலுத்தினேன். அப்போது நான் கேட்டரிங் வேலைகளுக்கு செல்வேன் அங்கு எனக்கு 100 முதல் 200 ரூபாய் சம்பளம் கிடைக்கும். அதில் நான் 150 ரூபாய் வீட்டில் கொடுத்துவிட்டு 50 ரூபாயை செலவுக்கு வைத்துக் கொள்வேன். அங்கு ரொட்டி தயாரிப்பில் ஈடுபட்டு என்னுடைய கைகள் எல்லாம் எரிச்சல் கொண்டு காணப்படும். இப்படி வாழ்க்கையுடன் போராடியதால்தான் நான் இந்த நிலைமைக்கு வந்து இருக்கிறேன்.

நாங்கள் மிகவும் அருமையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எங்களுடைய குடும்பத்தில் உழைப்பாளராக என்னுடைய தந்தை மட்டுமே இருந்தார். வாடகை வீட்டில் வசித்து வந்த எங்களுடைய மொத்த செலவுகளுக்கும் அவருடைய சம்பளம் மட்டும்தான் அடிப்படையாக இருந்தது. ஆனால் இதுவெல்லாம் தெரியாமலே நான் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தேன்.

இதையும் படிங்க : ஆர்சிபி போட்டிகள் பெங்களூரில் நடக்குமா?.. சந்தேகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த கர்நாடக கிரிக்கெட் சங்கம்

2019 ஆம் ஆண்டு எனக்கு நான் கிரிக்கெட்டுக்கு கடைசியாக கொடுத்துக் கொண்ட ஆண்டு. ஒருவேளை அதற்கு மேல் என்னால் கிரிக்கெட்டில் எதையும் செய்ய முடியவில்லை என்றால், நான் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடாமல் விட்டுவிடலாம் என்று நினைத்திருந்தேன். இது யாருக்கும் நான் சொல்லாத புதிய செய்தி. இதேபோல் நான் எப்பொழுது வீடு திரும்பினாலும், அங்கிருந்து மைதானத்திற்கு செல்லவே விரும்புவேன். அங்கு கிடைக்கும் மன அமைதி எனக்கு வேறு எங்கும் கிடைக்காது. அங்குதான் விளையாடி வளர்ந்து, நண்பர்களுடன் பேசி சிரித்து, தேநீர் அருந்திய பல நினைவுகள் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -