டி20 உலககோப்பை ஜெயித்தால்.. பல லட்சம் பரிசு.. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சிறப்பு அறிவிப்பு

0
213
Pakistan

இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்தது. இதற்குப் பிறகு பாகிஸ்தான் அணியிலும், பாகிஸ்தான் கிரிக்கெட்டிலும் நிறைய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பாபர் அசாம் மீண்டும் டி20 உலகக் கோப்பை கேப்டனாக கொண்டுவரப்பட்டிருக்கிறார். உள்நாட்டில் தற்பொழுது நாடு நியூசிலாந்துக்கு எதிராக நடந்து முடிந்த டி20 தொடரை பாகிஸ்தான அணி சமன் செய்திருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் அணியிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறது. அதே சமயத்தில் அணிக்கு தேவையான விஷயங்களை செய்வதற்கும் தயாராகவும் இருப்பதாக தெரிகிறது. அவர்கள் உலகக் கிரிக்கெட்டில் முக்கியமான இடத்தை பிடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதன் காரணமாக கேரி கிறிஸ்டன் மற்றும் ஜேசன் கில்லெஸ்பி இருவரையும் வெள்ளை மற்றும் சிவப்பு பந்து வடிவங்களுக்கு புதிய பயிற்சியாளர்களாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கொண்டு வந்திருக்கிறது. மேலும் டி20 உலகக்கோப்பையை பாகிஸ்தான் அணி வென்றால் சிறப்பு பரிசு வழங்க இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொக்ஷின் நக்வி அறிவித்திருக்கிறார்.

இது குறித்தான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சமூக வலைதளத்தில் “டி20 உலகக் கோப்பையை பாகிஸ்தான் அணி வென்றால் அணியில் இடம்பெற்று இருக்கும் ஒவ்வொரு வீரர்களுக்கும் ஒரு லட்சம் அமெரிக்க டாலர் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் அறிவித்திருக்கிறார். மேலும் அவர் யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் விளையாட வேண்டும் என்றும், இறைவன் விரும்பினால் வெற்றி கிடைக்கும் என்றும் கூறியிருக்கிறார். நாடு வீரர்களிடம் எதிர்பார்ப்பதாகவும் அதை நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார் என்று கூறப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : ரோகித் இஷான் இல்லை.. இந்த ஐபிஎல்ல இவங்க தான் பெஸ்ட் ஓபனர்ஸ் – சூரியகுமார் யாதவ் தேர்வு

மேலும் ஒரு லட்சம் அமெரிக்க டாலர் என்பது இந்திய மதிப்பில் 83 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இது மொத்த பாகிஸ்தான் அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படும் தொகையாகும். இதன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஊக்கம் பெற்று, டி20 உலகக் கோப்பையில் சிறப்பாகச் செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.