ரோகித் இஷான் இல்லை.. இந்த ஐபிஎல்ல இவங்க தான் பெஸ்ட் ஓபனர்ஸ் – சூரியகுமார் யாதவ் தேர்வு

0
856
Surya

நடப்பு ஐபிஎல் தொடரில் கடந்த வாரம் வரை பெரிய ரன் மழை பொழிந்து கொண்டிருந்தது. ரசிகர்களுக்கு வெறும் பவுண்டரியும் சிக்ஸர்களும் சலிப்பை உண்டாக்க ஆரம்பிக்க, பிசிசிஐ கொஞ்சம் சுதாரித்து பந்து வீச்சுக்கு சாதகம் தரக்கூடிய ஆடுகளங்களை அமைத்து வருகிறது. இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட அணியின் துவக்க ஜோடி குறித்து சூரியகுமார் யாதவ் பாராட்டியிருக்கிறார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் துவக்க ஜோடியாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இசான் கிஷான் என வலது மற்றும் இடது கை காம்பினேஷன் இருக்கிறது. இவர்கள் இருவருமே அதிரடியாக விளையாடுவதற்கு பெயர் பெற்றவர்கள். அதே சமயத்தில் நடப்பு ஐபிஎல் தொடரில் இவர்கள் பெரிய அளவில் அதிரடியாக தொடர்ந்து விளையாடவில்லை.

- Advertisement -

அதே சமயத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் துவக்க ஜோடியாக அபிஷேக் ஷர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் வந்த பிறகு உலக டி20 கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற சாதனையை ஹைதராபாத் அணி படைத்தது.

இவர்கள் முதல் பந்தில் இருந்து அடிப்பதோடு மட்டுமில்லாமல், தொடர்ச்சியாக அடிக்க கூடியவர்களாக இருந்தார்கள். ஆனால் ஆடுகளம் கொஞ்சம் மெதுவாகவோ அல்லது பந்துவீச்சுக்கு சாதகமாகவோ மாற்றப்பட்ட பொழுது, இவர்களுடைய அதிரடி எடுபடவில்லை. இவர்கள் கொஞ்சம் நின்று நிதானித்து விளையாட ஆரம்பித்திருக்கிறார்கள்.

இவர்களோடு ஒப்பிடுகையில் கொல்கத்தாவின் சுனில் நரைன் மற்றும் பில் சால்ட் துவக்க ஜோடி ஆடுகளம் எப்படி இருந்தாலும் ஒரே மாதிரியான கியரில் விளையாடக்கூடியவர்களாக இருக்கிறார்கள். நேற்று லக்னம் அணிக்கு எதிராக இந்த ஜோடி சிறப்பான அதிரடியை வெளிப்படுத்தியது. சுனில் நரைன் 39 பந்துகளில் 81, பில் சால்ட் 14 பந்தில் 32 ரன்கள் எடுத்தார்கள். மேலும் இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு வெறும் 26 பந்தில் 61 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

- Advertisement -

இதையும் படிங்க : நான் நல்லா பவுலிங் பண்ண இவங்கதான் காரணம்.. ஆனா இவர்தான் மூளையா இருக்கார் – சிமர்ஜித் சிங் பேட்டி

கொல்கத்தா அணியில் இந்த துவக்க ஜோடி குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிகள் சூரியகுமார் யாதவ் பதிவிடுகையில் “கடுமையான அழிவு” எனக் குறிப்பிட்டு இருக்கிறார். இவர்களே இந்த ஐபிஎல் தொடரின் சிறந்த துவக்க ஜோடியாக இருக்கிறார்கள்!