ஐபிஎல் ஏலத்தில் தவறாக வாங்கப்பட்டவர்.. பஞ்சாப் கிங்சுக்கு தனியாளாக வெற்றி பெற்று தந்த கதை.. என்ன நடந்தது?

0
1455
Shashank

நடப்பு 17 வது ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் துபாயில் கடந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட்டது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணி சுவாரஸ்யமான ஒரு தவறை செய்தது. ஆனால் பஞ்சாப் கிங்ஸ் செய்த தவறு, இன்று ஐபிஎல் தொடரில் அந்த அணிக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது.

நடந்து முடிந்த மினி ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி இந்திய உள்நாட்டு வீரர்களின் பெயர் அறிவிப்பின்போது ஷஷான்க் சிங் என்ற வீரரின் பெயருக்கு கையைத் தூக்கியது. ஏலத்தை நடத்தியவர் மற்ற யாரும் ஏலம் கேட்காததால், பஞ்சாப் கிங்ஸ் விலை கேட்ட வீரர் அவர்களுக்கு விற்கப்படுவதாக அறிவித்தார்.

- Advertisement -

திடீரென பஞ்சாப் கிங்ஸ் ஏலக்குழுவில் இருந்து, தாங்கள் கேட்ட ஷஷான்க் சிங் இவர் கிடையாது என்றும், அவர் 19 வயதான பேட்ஸ்மேன் என்றும், எனவே இந்த வீரரை மாற்றி தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்கள். ஆனால் வீரர் வாங்கப்பட்ட பிறகு அது மாற்ற முடியாது என்பதால், இவர்களது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில் திடீரென பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் தாங்கள் தவறாக வாங்கிய வீரர், தங்கள் அனைத்து சரியாக இருப்பார் என்று கூறி, அவரையே தங்கள் அணியின் தொடர்வதாக, அவர்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தார்கள்.

இந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் அல்சாரி ஜோசப்பின் ஒரே ஓவரில் ஏலத்தில் தவறாகப் வாங்கப்பட்ட ஷஷான்க் சிங் 20 ரன்கள் அடித்து ஆச்சரியப்படுத்தினார். இந்த நிலையில் இன்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முக்கிய போட்டியில், ஆட்டம் இழக்காமல் அதிரடியாக 29 பந்தில் 61 ரன்கள் எடுத்து, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு முக்கியமான வெற்றியை பெற்று தந்திருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : நான் பேட்டிங் பண்றப்ப நான்தான் கிங்.. இதெல்லாம் ஏற்கனவே கற்பனை பண்ணியதுதான் – ஆட்டநாயகன் ஷசான்க் சிங் பேட்டி

இவர் ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளில் விளையாடியவர். ஆனால் இவருக்கு அங்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் பஞ்சாப் கிங்ஸ் அணியில் நான்கு போட்டிகளிலும் தொடர்ந்து இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. மூன்று போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெற்றவர், அதில் இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடி, அதில் ஒரு போட்டியை தனி வீரராக என்றும் கொடுத்து விட்டார். பஞ்சாப் கிங்ஸ் செய்த ஒரு தவறு அந்த அணிக்கு மட்டும் இல்லாமல், இவருடைய கிரிக்கெட் வாழ்க்கையிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பையில் பிறந்து தற்பொழுது சத்தீஸ்கர் மாநில அணிக்கு விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.