விராட் கோலிய நாளைக்கு ஸ்லெட்ஜிங் பண்ணுவேன்.. அது கொஞ்சம் நல்லா இருக்கும் – நன்ட்ரே பர்கர் பேட்டி

0
305
Virat

நடப்பு ஐபிஎல் தொடரில் தற்பொழுது முதல் தகுதிச் சுற்றில் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதி வருகின்றன. இந்த நிலையில் நாளை எளிமினேட்டர் போட்டியில் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிக் கொள்ள இருக்கின்றன. இந்த நிலையில் ராஜஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் நன்ட்ரே பர்கர் விராட் கோலி குறித்து பேசி இருக்கிறார்.

நாளை குஜராத் அகமதாபாத் மைதானத்தில் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. எலிமினேட்டர் போட்டி என்கின்ற காரணத்தினால் இந்த போட்டிக்கு நாளை மிகுந்த முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும் இந்திய அணி கடந்த வருடத்தின் இறுதியில் தென் ஆப்பிரிக்க நாட்டுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்தது. அப்பொழுது இளம் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் நன்ட்ரே பர்கர் பந்துவீச்சின் போது விராட் கோலியிடம் மோதலில் ஈடுபட்டது போன்ற ஒரு தோற்றம் இருந்தது.

எனவே நாளை இரு அணிகளும் மோதிக்கொள்ள இருக்கும் நிலையில், ராஜஸ்தான் அணியின் சகவீரர் டோனவன் பெரீரா இடம் பர்கர் விராட் கோலி குறித்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

இதுகுறித்து பர்கர் பேசும் பொழுது “நான் எந்த பேட்ஸ்மேன்களிடமும் ஸ்லெட்ஜிங் செய்து அதை ரசித்தது கிடையாது. நான் போட்டியை மட்டுமே ரசித்து விளையாடுகிறேன் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் இந்தியா கடைசியாக எங்கள் நாட்டிற்கு விளையாட வந்த பொழுது எனக்கும் விராட் கோலிக்கும் இடையே சில விஷயங்கள் நடந்ததாக மக்கள் நினைத்தார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 உ.கோ.. தற்போதைய சிஎஸ்கே நட்சத்திரத்தை வளைத்து.. ஆப்கான் மாஸ்டர் பிளான்.. ரசிகர்கள் பாராட்டு

உண்மையில் விராட் கோலிக்கும் எனக்கும் இடையில் எதுவுமே நடக்கவில்லை. நான் அவரை எந்த ஸ்லெட்ஜிங் செய்யவில்லை. ஆனால் அவருடன் ஸ்லெட்ஜிங் போட்டியில் ஈடுபடுவது மிகவும் வேடிக்கையான ஒன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.