நான் பேட்டிங் பண்றப்ப நான்தான் கிங்.. இதெல்லாம் ஏற்கனவே கற்பனை பண்ணியதுதான் – ஆட்டநாயகன் ஷசான்க் சிங் பேட்டி

0
768
Shashank

நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி தனது நான்காவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக விளையாடி, மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. இது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இரண்டாவது வெற்றியாகும். மேலும் இந்த போட்டியில் அடிப்படை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட இந்திய உள்நாட்டு வீரர் ஷசான்க் சிங் 29 பந்தில் ஆட்டம் இழக்காமல் 61 ரன்கள் எடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணியை வெற்றி பெற வைத்தார்.

இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வெல்ல முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன் கில் ஆட்டம் இழக்காமல் 48 பந்தில் 89 ரன்கள் எடுத்தார். அந்த அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. ரபாடா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்கடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோ, சாம் கரன், சிக்கந்தர் ராஸா, ஜிதேஷ் சர்மா என எல்லோரும் பேட்டிங்கில் ஏமாற்றினார்கள். அந்த அணி 74 ரன்கள் எடுத்த பொழுது நான்கு விக்கெட்டை இழந்து இருந்தது.

இந்தச் சூழ்நிலையில் விளையாட வந்த ஷசான்க் சிங் மிகச் சிறப்பாக விளையாடி 29 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் ஆட்டம் இழக்காமல் கடைசி வரை நின்று பஞ்சாப் அணியை வெல்ல வைத்தார். இவர் கடந்த வருடத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தில் இருந்தார். அங்கு பெரிதாக இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

- Advertisement -

இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற இவர் பேசும் பொழுது “நான் இன்னும் இந்த உணர்வுக்குள் மூழ்க விரும்புகிறேன். இன்று நடந்த மாதிரியான சம்பவங்களை நான் எப்பொழுதும் கற்பனை செய்து வைத்திருக்கிறேன். இன்று அது நிஜமானதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய பயிற்சியாளர் என்னிடம் வந்து பந்தை பார்த்து ரியாக்ட் செய்ய சொன்னார். இரண்டு அணிகளுமே 200 ரன்கள் அடிக்கும் அளவுக்கு விக்கெட் நன்றாக இருந்தது மேலும் பவுன்ஸ் இருந்தது.

இதையும் படிங்க : என்னோட பிளான்ல நான் சொதப்பிட்டேன்.. ஆனா ரெண்டு புது பசங்க தனியா நின்னு முடிச்சிருக்காங்க – ஷிகர் தவான் பேட்டி

ரஷித் கான், மோகித் சர்மா ஆகியோர் ஜாம்பவான் வீரர்கள். ஆனால் நான் பேட்டிங் செய்யும்பொழுது என்னைதான் சிறந்தவன் என்று நினைத்துக் கொள்வேன். இதனால் உங்களுக்கு அனுபவம் கிடைக்கும். கடந்த முறை ஐதராபாத் அணியில் எனக்கு விளையாட நிறைய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த முறை எனக்கு விளையாட வாய்ப்புகள் நிறைய கிடைத்திருக்கிறது. அணி உரிமையாளர்கள் முதல் ஊழியர்கள் வரை எனக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -