ஆர்சிபி ரசிகர்கள் என்னை மன்னிச்சிடுங்க.. நான் அன்னைக்கு அப்படி பண்ணி இருக்கக் கூடாது – ஷேன் வாட்சன் வருத்தம்

0
596
Watson

இந்த ஆண்டு ஆர்சிபி அணி ஆரம்பத்தில் தோல்விகளை சந்தித்தாலும் கூட பிறகு மீண்டெழுந்து வந்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்காக ஆர்சிபி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

அப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருக்கும் ஆர்சிபி அணி நாளை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக எலிமினேட்டர் போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த போட்டி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த ஷேன் வாட்சன் 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியை குறிப்பிட்டு ஆர்சிபி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். 2008 முதல் 2015 ஆம் ஆண்டு வரை இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விளையாடினார். இதற்கு அடுத்த இரண்டு வருடங்கள் இவர் ஆர்சிபி அணிக்கு விளையாடினார். அடுத்ததான் சிஎஸ்கே அணிக்கு வந்தார்.

இந்த நிலையில் ஆர்சிபி அணி 2016 ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று ஹைதராபாத் அணியை சந்தித்தது. இந்த போட்டியில் தேன் வாட்சன் பந்துவீச்சில் நான்கு ஓவர்களுக்கு 61 ரன்கள் விட்டுக் கொடுத்தார். மேலும் 9 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இதன் காரணமாக ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது. இறுதியாக அந்த போட்டியில் ஒற்றை இலக்க ரன் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி தோல்வி அடைந்து முதல் ஐபிஎல் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை பரிதாபமாக தவறவிட்டது.

- Advertisement -

தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் ஷேன் வாட்சன் கூறும் பொழுது ” இன்று இங்குள்ள அனைத்து ஆர்சிபி ரசிகர்களிடமும் நான் மன்னிப்பு கேட்க வேண்டும். ஏன் நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால், 2016ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டிக்கு நான் சிறப்பாகவே தயாராகி இருந்தேன்.

இதையும் படிங்க: இந்திய அணி பயிற்சியாளர் பதவி.. தோனியிடம் உதவி கேட்கும் பிசிசிஐ.. சிஎஸ்கேவை விட்டு தருவாரா?

இதன் காரணமாக நான் சிறப்பாக செயல்பட முடியும் என்றும் நம்பினேன். ஆனால் இறுதிப் போட்டியில் என்னுடைய பந்துவீச்சு மிக மோசமானதாக அமைந்துவிட்டது. அந்த முறை ஆர்சிபி முதல் ஐபிஎல் பட்டத்தை வெல்ல முடியாமல் போனதற்கு இது முக்கிய காரணமாக அமைந்து விட்டது. இதற்காக ஆர்சிபி ரசிகர்கள் என்னை மன்னிக்க வேண்டும்” என்று கேட்டிருக்கிறார்