டி20 உ.கோ.. தற்போதைய சிஎஸ்கே நட்சத்திரத்தை வளைத்து.. ஆப்கான் மாஸ்டர் பிளான்.. ரசிகர்கள் பாராட்டு

0
304
Afghanistan

ஆசியக் கண்டத்தில் சமீபத்தில் உருவான அணிகளில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வெகு வேகமாக வளர்ச்சி அடைந்திருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சிஎஸ்கே லெஜன்ட் வீரரை வளைத்து மாஸ்டர் பிளான் செய்திருக்கிறது.

ஆப்கானிஸ்தான் அணியைப் பொறுத்தவரை எளிதான கிரிக்கெட் வடிவமான டி20 கிரிக்கெட்டில் ஆரம்பத்தில் இருந்து கவனிக்கத்தக்க செயல்பாட்டை கொண்ட அணியாக விளங்கியது. முகமது நபி மற்றும் ரஷீத் கான் இருவரும் அந்த அணி உலகம் முழுக்க தெரிவதற்கான முக்கிய வீரர்களாக இருக்கிறார்கள்.

- Advertisement -

அதே சமயத்தில் தற்பொழுது பேட்டிங் வரிசையில் துவக்க ஆட்டக்காரர்கள் குர்பாஸ் மற்றும் இப்ராகிம் ஜட்ரன் இருவரும் மிகச் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். இந்த ஆண்டு இந்திய ஐபிஎல் தொடரில் மட்டுமே மொத்தம் ஐந்து ஆப்கானிஸ்தான் வீரர்கள் இடம் பெற்றிருந்தார்கள்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான அணி ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் செயின்ட் நேவி கிட்ஸ்க்கு வந்துவிட்டது. இங்கு ஆப்கானிஸ்தான அணி 10 நாட்கள் கொண்ட பயிற்சி முகாம் ஒன்றை நடத்த இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அவர்கள் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஏற்படுத்திய தாக்கத்தை டி20 உலகக் கோப்பை தொடரில் ஏற்படுத்த பல முயற்சிகளை செய்து வருகிறார்கள்.

இதன் ஒரு பகுதியாக ஒட்டு மொத்த டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ் லெஜன்ட் மற்றும் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் டுவைன் பிராவோவை பந்துவீச்சு பயிற்சி ஆலோசகராக நியமித்துக் கொண்டிருக்கிறது. இவர் தற்போது ஆப்கானிஸ்தான் அணி உடன் இணைந்து பயிற்சி முகாமில் இருந்து பணிபுரிய தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : ஆர்சிபி ரசிகர்கள் என்னை மன்னிச்சிடுங்க.. நான் அன்னைக்கு அப்படி பண்ணி இருக்கக் கூடாது – ஷேன் வாட்சன் வருத்தம்

ஐபிஎல் தொடரில் தற்பொழுது சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மிகச்சிறப்பான முறையில் பிராவோ செயல்பட்டு வருகிறார். அதே சமயத்தில் அவருக்கு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் மைதான சூழ்நிலைகள் விரல் நுனியில் தெரியும். இப்படிப்பட்ட ஒருவரை பந்துவீச்சு பயிற்சியாளராக ஆப்கானிஸ்தான் கொண்டு வந்திருப்பது மாஸ்டர் பிளான் ஆக பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் பிராவோ ஆல் ரவுண்டர் என்பதால் அவர் பேட்டிங் சம்பந்தப்பட்ட டிப்ஸ்களையும் ஆப்கானிஸ்தான் அணிக்கு கொடுக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.